ஹோட்டலில் குண்டுவெடிப்பு

கராச்சி: பாகிஸ்­தா­னில் உள்ள ஆடம்­பர ஹோட்­ட­லில் குண்டு வெடித்­த­தில் ஐவ­ருக்­கும் மேற்­பட்­டோர் கொல்­லப்­பட்­ட­னர். பத்­துக்­கும் மேற்­பட்­டோர் காயம் அடைந்­தார்.

குவெட்டா நக­ரில் உள்ள செரினா ஹோட்­ட­லின் வாகனம் நிறுத்தும் இடத்தில் பாகிஸ்­தா­னுக்­கான சீனத் தூதரை இலக்­கா­கக் கொண்டு தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆஃப்கா­னிஸ்­தான் எல்­லை­யில் உள்ள பலு­சிஸ்­தான் தலை­ந­க­ரான குவெட்­டா­வில் சீனத் தூதர் இருந்­தா­லும் குண்டு வெடிப்­புச் சம்­ப­வத்­தின்­போது ஹோட்­ட­லில் அவர் இல்லை எனத் தெரி­கிறது.

இந்­தத் தாக்­கு­த­லுக்கு பாகிஸ்­தா­னில் உள்ள தலி­பான் அமைப்­பி­னர் பொறுப்பு ஏற்­றுக்கொண்­ட­னர்.

ஆனால் தாக்­கு­த­லுக்­கான கார­ணத்தை அவர்­கள் தெரி­விக்­க­வில்லை. ஹோட்­ட­லின் வாகனம் நிறுத்தும் இடத்தில் குண்டு வெடித்­த­தால் தீ மள­ம­ள­வென்று பரவி பல வாக­னங்­கள் எரிந்து நாச­மா­யின.

குவெட்­டா­வில் உள்ள செரினா ஹோட்­டல் பிர­ப­ல­மாக விளங்­கு­கிறது. அர­சாங்க அதி­கா­ரி­களும் பிர­மு­கர்­களும் அங்கு தங்­கு­வது வழக்­கம்.

இது நிச்­ச­யம் பயங்­க­ர­வா­தச் செயலாகத்தான் இருக்கும் என்று பாகிஸ்­தா­னின் அமைச்­சர் ஷேக் ரஷீத் அஹ­மட் சொன்னார்.

சீனத் தூதர் நோங் ரோங் நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொண்­ட­தா­க­வும் குண்டு வெடிப்பதற்கு முன்பே அவர் ஹோட்­ட­லில் இருந்து வெளியேறி விட்டதாகவும் அவர் தெரிவித் தார்.

இதனால் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

அவர் தலைமையில் நான்கு பேர் ஹோட்டலில் இருந்ததாக நம்பப் படுகிறது.

இது ஒரு தற்­கொ­லைத் தாக்­கு­ தல் என்று உறுதியோடு கூறிய தலிபான் பேச்சாளர் ஒருவர், காரில் நிரப்பி வைக்­கப்­பட்ட குண்­டு­களை தற்­கொ­லை­யாளி வெடிக்­கச் செய்­துள்­ளார் என்­று குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!