கேன்பரா: சீனாவின் கனவுத் திட்டமான பல நாடுகளை இணைக்கும் பொருளியல் பாதைத் திட்டத்திலிருந்து ஆஸ்திரேலியா விலகியிருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா, இரு தரப்பு உறவு மோசமடையும் என்று எச்சரித்துள்ளது.
தனது விருப்பத்தைப் பூர்த்தி செய்யாத அல்லது பிடிக்காதவற்றைச் செய்யும் நாடுகளை, இரு தரப்பு உறவு மோசமடையும் என்று எச்சரிப்பதை சீனா வழக்கமாகக் கொண்டுள்ளது.
விக்டோரியா மாநில அரசுக்கும் சீனாவுக்கும் இடையிலான இரு ஒப்பந்தங்களை ஆஸ்திரேலியாவின் மத்திய அரசாங்கம் தனது புதிய அதிகாரத்ைதப் பயன்படுத்தி ரத்து செய்துள்ளது.
தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்யப்பட்டதாக ஆஸ்திரேலியா கூறியது.
இதனை ஆத்திரமூட்டும் செயல் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள சீனத் தூதரகம் சாடியுள்ளது. "ஆஸ்திரேலிய-சீன உறவை மேம்படுத்துவதில் ஆஸ்திரேலியாவுக்கு அக்கறையில்லை. இரு தரப்பு உறவு மோசமடைந்து ஆஸ்திரேலியாவுக்கு பாதகமாக முடியும்," என்று அது கூறியுள்ளது.
இதற்கிைடயே சீனாவின் பொருளியல் பாதைத் திட்டம் அதன் செல்வாக்கைப் பெருக்கும் உத்தியாகப் பயன்படுத்தப் படுகிறது என்று ஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் கூறினார்.
"சீனாவுடன் உள்ளூர் அர சாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தம் கவலையளிக்கிறது. ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு எதிரானது," என்றார் அவர்.

