விசாரணை வளையத்தில் மின்னியபொலிஸ் காவல்துறை

வாஷிங்­டன்: மின்­னி­ய­பொ­லிஸ் நகர காவல்­து­றை­யின் காவல் நடை­மு­றை­களை மத்­திய விசா­ர­ணைப் பிரிவு விசா­ரிக்­கத் தொடங்­கி­யி­ருக்­கிறது.

இந்த நக­ரத்­தைச் சேர்ந்த காவல் துறை அதி­கா­ரி­தான் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்­லப்­பட்ட வழக்­கில் குற்­ற­வாளி எனத் தீர்ப்பு அளிக்­கப்பட்­டுள்ளது.

சட்­டத்­துக்­குப் புறம்­பான காவல் நடை­மு­றை­கள் பின்­பற்­றப்­ப­டு­கி­றதா என்­பதை நீதித் துறை விசா­ரிக்க வேண்­டும் என்று தலை­மைச் சட்ட அதி­காரி மெரிக் கார்­லாண்ட் வலியுறுத்தியுள்ளார்.

கறுப்­பின ஆட­வ­ரான ஃபிளாய்­டின் கழுத்து மீது முட்­டியை வைத்து அழுத்­திப் பிடித்­த­தால் அவர் மூச்­சுத் திணறி மாண்டார்.

இந்த வழக்­கில் அனைத்­துக் குற்றச் ­சாட்­டு­க­ளி­லும் காவல்­துறை அதி­காரி குற்­ற­வாளி என நீதி­மன்­றம் தீர்ப்பில் தெரிவித்தது.

இந்த நிலையில் மின்னியபொலிஸ் காவல்துறை விசாரணை வளையத் துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மின்னியபொலிசில் காவல் துறையின் பயிற்சி, கொள்கைகள், வலுக்கட்டாய விசாரணைகள், மேற்பார்வை உள்ளிட்ட நடைமுறைகள் மறுபரிசீலனை செய்யப் படும் என்று திரு மெரிக் கார்லாண்ட் தெரிவித்தார்.

"சட்டவிரோதமான நடைமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது குறித்து பொதுமக்களுக்கு அறிக்கை வெளி யிடப்படும்," என்ற அவர், சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!