'பூமியில் அமைதி நிலவ வேண்டும்'
ஐநா: பூமியில் இயற்கையோடு அமைதி திரும்ப வேண்டும் என்று பூமி நாளில் ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அறைகூவல் விடுத்துள்ளார். உலகம் முழுவதும் நேற்று பூமி நாள் கடைப்பிடிக்கப்பட்டது. உலகின் முக்கிய கட்டத்தில் இவ்வாண்டின் பூமி நாள் அனுசரிக்கப்படுகிறது. பூமியின் வளங்கள் சூறையாடப் படுகின்றன, வனவிலங்குகளை ஒழித்து, காற்று, நிலம், கடலை குப்பை கொட்டும் இடமாகக் பயன்படுத்துகிறோம். சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு உணவுச் சங்கிலி அறுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
போலித் தடுப்பூசி விற்பனை
வாஷிங்டன்: அமெரிக்காவின் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ஃபைசர், மெக்சிகோவிலும் போலந்திலும் கைப்பற்றப்பட்ட சந்தேகத்துக்குரிய 'ஃபைசர்' தடுப்பூசிகள் போலியானதுதான் என்பதை நேற்று முன்தினம் உறுதி செய்தது.

