ஆசியானுக்கு வேண்டுகோள்

ஆசியானுக்கு வேண்டுகோள்

2 mins read
05afb26c-6398-47c1-af17-5d07118720e9
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் இன்று நடை­பெ­றும் ஆசி­யான் உச்­ச­நிலை மாநாட்­டில் மியன்­மா­ர் நெருக் கடி குறித்து விவா­திக்­கப்­ப­டவிருக் கிறது.

இந்த மாநாட்­டில் சிங்­கப்­பூர் உட்­பட ஆசி­யான் தலை­வர்­கள் பங்­கேற்­கின்­ற­னர்.

பிப்­ர­வரி 1ஆம் தேதி அதிகார பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அர­சாங்­கத்­தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றிய மியன்­மாரின் ராணு­வத் தள­ப­தி­யும் இதில் பங்­கேற்­க­வி­ருக்­கி­றார்.

இத­னால் ஆசி­யான் கூட்­டத்­தின் முக்­கி­யத்­து­வம் அதி­க­ரித்து வரு­கிறது.

இந்நிலை­யில் ஆங் சான் சூச்சி கட்சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஆசி­யான் கூட்­டத்­தில் பங்­கேற்க அனு­மதி வழங்க வேண்­டும் என்று தென்­கி­ழக்கு ஆசிய நாடு­க­ளைச் சேர்ந்த 45 அர­சாங்க சார்­பற்ற அமைப்­பு­கள் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளன.

"மியன்­மார் மக்­கள் தேர்ந்­தெ­டுத்த பிர­தி­நி­தி­க­ளு­டன் விவா­திக்­கா­மல் ஆலோ­சிக்­கா­மல் மியன்­மா­ரின் தற்­போ­தைய நெருக்­க­டிக்­குத் தீர்வு காண முடி­யாது," என்று சமூக ஊட­கத்­தில் வெளி­யி­டப்­பட்ட கடி­தத்­தில் அர­சாங்க சார்­பற்ற அமைப்­பு­கள் கேட்­டுக்கொண்­டன.

"உச்­ச­நி­லைக் கூட்­டத்­தில் பங்­கேற்க மியன்­மார் ராணு­வத் தள­ப­திக்கு அழைப்பு விடுத்­தி­ருப்­பது சொந்த மக்­க­ளையே அவ­ரது ராணு­வம் படு­கொலை செய்­தி­ருப்­பதை அங்­கீ­க­ரிப்­ப­து­போல் உள்­ளது," என்றும் அமைப்­பு­கள் கூறி­யுள்­ளன.

மியன்­மார் நெருக்­க­டிக்­குத் தீர்வு காணும் முதல் அனைத்­து­லக முயற்­சி­யாக ஆசி­யான் உச்­சநி­லைக் கூட்­டம் கூட்டப்பட்டு உள்ளது.

கடந்த பிப்­ர­வரி மாதம் மியன் மாரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணு­வம் நூற்­றுக் ­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை கொன்­று குவித்துள்ளது.

ஆயிரக்கணக்கானவர்களை சிறையில் அடைத்துள்ளது.

ஆசி­யா­னுக்­கும் இந்­தக் கூட்­டம் சோத­னை­யாக அமை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பொது­வாக உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் ஆசி­யான் நாடு­கள் தலை­யி­டு­வ­தில்லை.

இந்­தச் சூழ்­நி­லை­யில் உறுப்பு நாடு­க­ளின் ஒன்­றான மியன்­மாரின் நிலவரம் குறித்து ஆசியான் தலைவர்கள் ஜகார்த்தாவில் ஆலோசனை நடத்தவிருக்கின்ற னர்.