மெல்பர்ன் தம்பதியிடம் எட்டு ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய மாது

மெல்பர்ன் தம்பதியிடம் எட்டு ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய மாது

2 mins read
47043f3e-9f3c-4cec-a5ea-efe4a7afd755
மெல்பர்ன் கண்ணன் தம்பதி. படம்: நைன் -

மெல்­பர்ன்: மெல்­பர்ன் நக­ரில் இந்தியாவைச் சேர்ந்த 66 வயது பாட்டியை எட்டு ஆண்டுகளாக அடிமையாக வைத்திருந்த வழக்கில் தம்பதியர் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீதி­மன்றம் தடை விதித்­தி­ருந்த தால் தம்பதியரின் பெயர் கே.கே மற்­றும் கே.கே என்று மட்­டுமே குறிப்­பி­டப்­பட்­டது. அந்தத் தடை தற்போது நீக்கப்பட்டதால் திரு­ம ண­மான தம்­ப­தி­ய­ரின் பெயர் குமு­தினி கண்­ணன், கந்­த­சாமி கண்­ணன் என்பது தெரிய வந்துள்ளது.

விக்­டோ­ரியா உச்ச நீதி­மன்­றம் நேற்று தீர்ப்­ப­ளித்­த­போது கண­வ­ரின் தோளில் சாய்ந்து மனைவி கதறி அழு­தார் என '9நியூஸ்' குறிப்பிட்டது.

வேண்­டு­மென்றே இந்­தி­ய மாதை அடி­மை­யாக வைத்திருந்தது, அவ­ருக்­கு அடிப்­படை உரி­மை­க­ளை­ வழங்க மறுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தம்பதியர் எதிர்நோக்கினர்.

மவுண்ட் வேவர்லி வீட்­டில் பாட்டியை மறைத்து வைத்­திருந்த அவர்கள் நாள் ஒன்­றுக்கு மூன்று டாலர் மட்­டுமே சம்­ப­ள­மாக வழங் கினர்.

கடந்த 2007ஆம் ஆண்­டில் கண்­ணன் வீட்­டில் தங்­கு­வ­தற்­காக பாட்டி இந்­தி­யா­வி­லி­ருந்து ஆஸ்­தி­ரே­லியாவுக்கு வந்­தார்.

தம்­ப­தி­ய­ரின் குழந்­தை­களை கவ­னித்­துக்­கொள்­வ­தற்­காக மெல்­பர்ன் நக­ருக்கு தான் வர­வ­ழைக்­கப்­பட்­ட­தாக ஆரம்பத்தில் நினைத்த தாக அவர் விசாரணை அதிகாரி களிடம் தெரிவித்துள்ளார்.

திரு­மதி கண்­ண­னின் உத்­த­ரவு­ க­ளுக்குக் கீழ் படி­யா­விட்­டால் எத்­த­கைய தண்­டனை கிடைக்கும் என்­பதையும் அவர் விவ­ரித்­திருந்தார்.

"உறைந்­து­போ­ன கோழி இறைச்­சியை எடுத்து எனது தலை­யில் அடிப்­பார். தூங்­கப் போனால் என் மீது வெந்­நீரை ஊற்­று­வார்," என்று அவர் தெரி­வித்­தார்.

சில வாரம் விடு­மு­றை­யில் சென்­றால்­கூட பாட்­டியை அவர்கள் வீட்­டில் பூட்­டி­வைத்துவிட்டுச் சென்றனர்.

பாட்­டியை இந்­தி­யா­வுக்கு அனுப்ப தம்பதியர் மறுத்­ததால் பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­தி­னர் போலி­சா­ரு­டன் தொடர்பு கொண்­ட­னர்.

அதி­கா­ரி­கள் அந்­தப்பாட்டியை தேடிக் கண்­டு­பி­டித்தபோது அவர் உடல் மெலிந்து நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்டு அனைத்­துப் பற்­க­ளை­யும் இழந்­தி­ருந்­தார்.

இவ்வாண்டு ஜூன் மாதம் தம்பதியருக்கு தண்டனை விதிக்கப் படவிருக்கிறது. கற்­றல் குறை­பாடு கொண்ட தங்களுடைய குழந்­தை­க­ளுக்கு மாற்று ஏற்­பாடுகளைச் செய்வதற்காக அவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.