தாய்லாந்தில் கிருமித்தொற்று திடீர் அதிகரிப்பு

பேங்­காக்: தாய்­லாந்­தில் கிரு­மித்­தொற்று எதிர்­பா­ராத அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது. வெள்­ளிக்­ கிழமை ஒரு நாள் மட்­டும் புதி­தாக 2,070 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

அந்­நாட்­டில் கொள்­ளை­நோய் பர­வி­ய­தி­லி­ருந்து இப்­போ­து­தான் முதல் முறை­யாக புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது.

மூன்றாவது அலை­யில் தாய்­லாந்து சிக்­கி­யுள்­ளது. கொவிட்-19 தொற்­றுக்கு மேலும் நால்­வர் பலி­யா­கி­விட்­ட­னர் என்று அந்­நாட்­டின் சுகா­தார அமைச்­சின் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். புதிய தொற்­றுச் சம்­ப­வங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 50,183க்கு அதி­க­ரித்­துள்­ளது. மொத்­தம் 121 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். தாய்­லாந்து அரசு, கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­ருந்­தா­லும் 23 நாட்­களில் புதிய உரு­மா­றிய கிரு­மி­யால் 20,000 பேருக்கு மேல் பாதிக்­கப்­பட்­ட­னர். 27 பேர் மாண்­ட­னர். பேங்­காக்­கில் தொடங்­கிய கிரு­மித் தொற்று நாடு முழு­வ­தும் பர­வி­யது. இதை­ய­டுத்து அடுத்த மாதம் இறுதி வரை பள்­ளி­கள், மது­பா­னக் கூடங்­கள், உடற்­பி­டிப்பு நிலை­யங்­களை மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. உண­வ­கங்­களில் மது­பா­னம் விற்­க­வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!