பருவநிலை; பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவ ஜோ பைடன் உறுதி

பருவநிலை; பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவ ஜோ பைடன் உறுதி

1 mins read
75c49101-361f-458d-aebb-97af7bd61474
-

வாஷிங்­டன்: பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு எதி­ரான போராட்­டத்­தில் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நாடு­க­ளுக்­கும் ஏழை நாடு­க­ளுக்­கும் மேம்பட்ட உதவி வழங்கப் படும் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் உறு­தி­ய­ளித்­துள்­ளார். நிதி­யு­த­வியை அதி­க­ரிப்­பது, தனி­யார் துறை முத­லீ­டு­க­ளின் ஆத­ர­வு­க­ளைத் திரட்­டு­வது மூலம் உதவி வழங்­கப்­படும் என்றார் அவர்.

"நல்ல யோச­னை­யும் நல்­லார்­வ­மும் இருந்­தால் மட்­டும் போதாது. தனி­யார் மற்­றும் பொதுத் துறை­யின் நிதி­யா­த­ர­வும் இருக்க வேண்­டும்," என்று இரண்டு நாள் மெய்­நி­கர் மாநாட்­டில் பேசிய பைடன் வலியுறுத்தினார்.

இதில் நாற்­பது நாடு­க­ளின் தலை­வர்­களும் வர்த்­தக நிறு­வ­னங்­க­ளின் நிர்­வா­கி­களும் கலந்துகொண்­ட­னர்.

உல­கில் மிக­வும் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நாடு­க­ளுக்கு நாம் அனை­வ­ரும் சேர்ந்து உதவ வேண்­டும் என்று அவர் கேட்­டுக் கொண்­டார்.