இரண்டு வார தனிமைக்குப்
பிறகு மீண்டும் தொற்று
சிட்னி: ஆஸ்திரேலியாவின் பெர்த் ஹோட்டலில் இரண்டு வாரம் தனிமையில் தங்கியிருந்த ஆஸ்திரேலியருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இது, உருமாறிய கிருமி மூலம் தொற்று பரவும் அபாயத்தைக் காட்டுகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பெர்த்திலிருந்து மெல்பர்னில் உள்ள தனது வீட்டுக்கு அவர் விமானம் மூலம் சென்றதால் விமானத்தில் இருந்த பயணிகள் இரு வாரம் தனிமையில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும்
முயற்சியில் அதிகாரிகள் தீவிரம்
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலித் தீவுக்கு அருகே 53 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த நீர்மூழ்கிக் கப்பலில் பிராணவாயு குறைந்து வருகிறது. நேற்று 21 போர்க்கப்பல்களும் ஒரு ஹெலிகாப்டரும் மீட்புப் பணிக்கு அனுப்பி வைக்கப் பட்டன. சிங்கப்பூரும் நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பியுள்ளது. அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. கடந்த புதன்கிழமை காணாமல் போன கப்பலை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கோலாலம்பூர்: மலேசியாவில் புதிதாக ஒரே நாளில் 2,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 387,535க்கு அதிகரித்துள்ளது.
மலேசியாவில் 2,847 பேர் பாதிப்பு

