பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள இந்தப் பிரத்தியேக நீச்சல் குளத்திற்கு வருவோர், படத்தில் உள்ள இரு கட்டடங்களுக்கு இடையே "பறக்க" ஓர் அற்புதமாக வாய்ப்பு காத்திருக்கிறது.
அடுத்த மாதம் திறக்கப்படவிருக்கும் 'ஸ்கை பூல்' என்று அழைக்கப்படும் இந்த 25 மீட்டர் நீள நீச்சல் குளம், லண்டனின் 'நைன் எல்ம்ஸ்' இடத்திலுள்ள 'எம்பஸ்ஸி கார்டன்ஸ்' குடியிருப்புப் பகுதியில் இரு கட்டடங்களுக்கு இடையே 10வது தளத்தில் அமைந்துள்ளது.
தரையிலிருந்து 35 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் காட்சியளிக்கும் இந்த நீச்சல் குளத்தைத் தரையிலிருந்து காண்போருக்கு, நீச்சல் அடிப்போர் இரு கட்டடங்களுக்கு இடையே "பறந்து செல்வது" அல்லது "வானில் மிதப்பது" போன்ற தோற்றத்தை அளிக்கும்.
அமெரிக்காவின் கொலொராடா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த நீச்சல் குளம், லண்டனில் பொருத்த ஏறத்தாழ 8,000 கிலோ மீட்டர் தூரம் கொண்டுசெல்லப்பட்டது.

