ஆசியான் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மியன்மார் ராணுவத் தலைவர் ஒப்புதல் அளித்தார் மியன்மாருக்கு பேராளர் குழு, உதவி

ஆசியான் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மியன்மார் ராணுவத் தலைவர் ஒப்புதல் அளித்தார் மியன்மாருக்கு பேராளர் குழு, உதவி

2 mins read
5009d8d0-a836-48fc-8ce4-14ca12640029
-

பேங்­காக்: ஜகார்த்­தா­வில் நேற்று நடை­பெற்ற ஆசி­யான் தலை­வர்­கள் கூட்­டத்­தில் பங்­கேற்ற மியன்­மார் ராணு­வத் தலை­வர் மின் அவுங் லைங், ஆசி­யான் பேரா­ளர் குழு மியன்­மா­ரைப் பார்­வை­யி­ட­வும் மனி­தா­பி­மான உத­வி­களை வழங்­க­வும் அனு­ம­திப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

நாட்­டைப் பார்­வை­யி­டப்­போ­கும் பேரா­ளர் குழு­வை­யும் மனி­தா­பி­மான உத­வி­க­ளை­யும் ஆசி­யான் அனுப்­பு­வதை அவர் எதிர்­பார்த்து இருப்­ப­தாக சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங், கூட்­டத்­திற்­குப் பிறகு குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 பர­வ­லுக்­குப் பிறகு ஆசி­யான் தலை­வர்­க­ளி­டையே நடை­பெ­றும் முதல் நேரடிக் கூட்­டம் இது.

மியன்­மா­ர் வன்­மு­றை­யைக் கைவிட்டு, அர­சி­யல் கைதி­க­ளைச் சிறை­யி­லி­ருந்து விடு­விக்க வேண்­டும் என்று மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின், இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ உட்­பட பல தலை­வர்­கள் வலி­யு­றுத்­தி­னர். இதே கருத்தை முன்பு சிங்­கப்­பூ­ரின் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரிவித் திருந்தது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை நில­வ­ரப்­படி, பிப்­ர­வரி 1ல் ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­ய­தி­லி­ருந்து 745 பேர் ராணு­வத்­தி­ன­ரால் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் 3,300க்கும் அதி­க­மா­னோர் சிறை­யி­லி­டப்­பட்­ட­தா­க­வும் அர­சி­யல் கைதி­க­ளுக்­கான உத­விச் சங்­கம் தெரி­வித்­தது. பலர் பாது­காப்­புப் படை­க­ளால் கொண்டு செல்­லப்­பட்­ட­தா­க­வும் உள்­ளூர் அறிக்­கை­கள் தெரிவித்தன

கொவிட்-19 கொள்­ளை­நோய்க்கு எதி­ரான போராட்­டத்­தில் மியன்மார் திண­றி­வ­ரும் வேளை­யில், அர­சி­யல் நெருக்­கடி நிலை­மையை இன்­னும் மோச­மாக்­கி­யுள்­ளது.

அடுத்த ஆறு மாதங்­க­ளுக்­குள் 3.4 மில்­லி­யன் வரை­யி­லா­ன­ மக்­கள் பசி­யால் வாடும் நிலை ஏற்­ப­ட­லாம் என ஐக்­கிய நாடு­கள் சபை­யின் உலக உணவு அமைப்பு மியன்­மாரை எச்­ச­ரித்­துள்­ளது.

லாவோஸ், பிலிப்­பீன்ஸ், தாய்லாந்து நாட்­டுத் தலை­வர்­கள் இந்த மாநாட்­டில் கலந்­து­கொள்­ள­வில்லை.

ஆனால், மியன்­மா­ருக்­கான ஐக்­கிய நாடு­கள் தூதர் திரு­வாட்டி கிறிஸ்­டைன் ஸ்ரா­னர் பர்­கெ­னர், சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் உட்­பட வட்­டார மூத்த அதி­கா­ரி­களு­டன் உரை­யா­டல்­களை நடத்­தி­னார்.

ராணுவ ஆட்சி நடப்­புக்கு வந்­தது முதல் மியன்­மா­ருக்­குள் நுழைய அவர் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.