செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
8d0c960a-52b1-4795-bc1a-bd8c0674a7c4
-

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து பயண ஏற்பாடு நிறுத்திவைப்பு

வெலிங்டன்: மேற்கு ஆஸ்திரேலியாவுடனான பயண ஏற்பாட்டை நியூசிலாந்து நேற்று முன்தினம் நிறுத்திவைத்தது. பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த், பீல் ஆகிய பகுதிகளில் 3 நாள்களுக்குப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நியூசிலாந்து அரசாங்க இணையப்பக்கம் தெரிவித்தது. மெல்பர்னிலிருந்து பெர்த்துக்கு சென்ற அந்த ஆடவர் உணவகங்கள், பல்கலைக்கழகம், மருத்துவரின் அலுவலகம், நண்பரின் வீடு எனப் பல இடங்களுக்குச் சென்றராம்.

ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசியை மீண்டும் பயன்படுத்தும் அமெரிக்கா

வாஷிங்டன்: ஜான்சன்&ஜான்சன் கொவிட்-19 தடுப்பூசியை அமெரிக்காவில் உடனடியாக மீண்டும் பயன்படுத்தத் தொடங்கலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய அரிதான ரத்தக் கட்டி பிரச்சினைக்கும் இந்தத் தடுப்பூசிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக 10 நாள்களுக்கு அதன் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இவற்றுக்கிடையே தொடர்பு இருக்க வாய்ப்பிருந்தாலும் அத்தகைய அபாயம் மிகக் குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு மில்லியன் மக்களில் 7 பேருக்கு அவ்வாறு நிகழ்ந்ததாகத் தரவுகள் குறிப்பிட்டன.