கோலாலம்பூர்: மலேசிய அரசியார் அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியாவை அவமதித்ததாக ஃபாஹ்மி ரேஸா எனும் ஃபேஸ்புக் கணக்கின் உரிமையாளருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டிருப்பதை போலிஸ் உறுதிப்படுத்தியது.
ரகசிய குற்றவியல் விசாரணைப் பிரிவால் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத் துறை இயக்குநர் ஹுஸிர் முகம்மது குறிப்பிட்டார்.
கீழறுப்புக் குற்றச் சட்டம் 1948ன் பிரிவு 4(1), தொடர்புகள் மற்றும் பல்லூடகச் சட்டம் 1998ன் 233வது பிரிவு ஆகியவற்றின்கீழ் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சமூக ஊடகத்தை அறிவுபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் நாட்டின் அமைதியைக் குலைக்கும் விதத்தில் தளங்களைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் எனவும் போலிசார்
கேட்டுக்கொண்டனர்.
புகாரின் தொடர்பில் நேற்று முன்தினம் ஃபாஹ்மி ரேஸா கைது செய்யப்பட்டார். அவரை நேற்று ஒரு நாள் மட்டும் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்ததாக திரு ஹுஸிர் முகம்மது குறிப்பிட்டார்.
'ஸ்பாட்டிஃபை' தளத்தில் உள்ள 'டெங்கி கி?' எனும் பாடல் தொகுப்பின் தொடர்பில் ஃபாஹ்மி ரேஸா கைது செய்யப்பட்டிருக்கலாம் என தி ஸ்டார் குறிப்பிட்டது.

