ஒரு பில்லியன் பேருக்குமேல் தடுப்பூசி

2 mins read
c2ccfc31-3ab5-488d-be97-1b399ee9f261
-

உலகளவில் ஒரே நாளில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டது

பாரிஸ்: உல­கம் முழு­வ­தும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் எண்­ணிக்கை ஒரு பில்­லி­ய­னைத் தாண்­டி­விட்­டது.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, 207 நாடு­க­ளி­லும் ஆட்­சிப் பகு­தி­களி­லும் 1,002,938,540 பேர் தடுப்­பூசி போட்­டுள்ளதாக ஏஎ­ஃப்பி புள்ளி­வி­வ­ரம் தெரி­விக்­கிறது.

இருப்­பி­னும், உல­க­ள­வில் புதிய உச்­ச­மாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஒரே நாளில் மேலும் 893,000 பேர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். இந்­தி­யா­வில் கிரு­மிப் பர­வல் நாளுக்கு நாள் மோச­மாகி­வரு­வதே இதற்கு முக்­கி­யக் கார­ண­மா­கக் கூறப்­ப­டு­கிறது. அந்­நாட்­டில் தொடர்ந்து நான்­கா­வது நாளாக முந்­நூ­றா­யி­ரத்­திற்­கும் அதி­க­மா­னோர் புதி­தாக கொரோனா பாதிப்­புக்­குள்­ளா­கி­னர்.

தாய்­லாந்­தில் தொடர்ந்து 2வது நாளாக நேற்று முன்­தி­னம் புதிய உச்­ச­மாக 11 பேர் கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

அங்கு புதி­தாக 2,348 பேரை கொரோனா தொற்ற, மொத்த பாதிப்பு 55,640ஆக உயர்ந்­தது. கொரோனாவால் அங்கு இது­வரை 140 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

இதை­ய­டுத்து, கொரோனா பர­வலைத் தடுக்­கும் முயற்­சி­யாக தேவைப்­பட்­டால் மாநில ஆளு­நர்­கள் பொது இடங்­களை மூட­லாம் என்­றும் ஊர­டங்கு விதிக்­க­லாம் என்­றும் பிர­த­மர் பிர­யுத் சான் ஓ சா தமது ஃபேஸ்புக் பக்­கம் வழி­யா­கத் தெரி­வித்து இருக்­கி­றார்.

தலை­ந­கர் பேங்­காக்­கில் பூங்­காக்­கள், உடற்­ப­யிற்சி நிலை­யங்­கள், திரை­ய­ரங்­கு­கள், பகல்­நே­ரப் பரா­ம­ரிப்பு நிலையங்­கள் உள்­ளிட்­ட­வற்றை இன்று முதல் மே 9ஆம் தேதி வரை மூட உத்­த­ர­வி­டப்­பட்டுள்ளது.

கடந்த 2019 டிசம்­பரில் சீனா­வின் வூஹான் நக­ரில் தோன்­றிய கிருமித்தொற்று உல­கம் முழு­வ­தும் இது­வரை மூன்று மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோ­ரின் உயி­ரைப் பறித்­து­விட்­டது.

கொரோனாவால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள பிரே­சி­லில் இம்­மா­தம் மட்­டும் ஏறக்­கு­றைய 68,000 பேர் இறந்­து­விட்­ட­னர்.

கொரோனா பர­வல் தணி­வ­தற்­கான அறி­குறி ஏதும் தென்­ப­டாத நிலை­யில், பல நாட்டு அர­சாங்­கங்­களும் தடுப்­பூ­சி­மீதே நம்­பிக்கை வைத்­துள்­ளன. உல­கம் முழு­வ­தும், கடந்த ஒரு மாதத்­தில் தடுப்­பூசி போடு­வது இரட்­டிப்­ப­டைந்­துள்­ளது.

ஆயி­னும், பணக்­கார நாடு­களில் தடுப்­பூசி கிடைப்­பது எளி­தாக இருந்து வரு­கிறது. உல­க­ள­வில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரில் 47 விழுக்­காட்­டி­னர் அதிக வரு­மா­னம் ஈட்­டும் நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். உலக மக்­கள்­தொ­கை­யில் அந்­நா­டு­க­ளின் பங்கு 16% மட்­டுமே என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மாறாக, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரில் குறைந்த வரு­மான நாடு­க­ளின் பங்கு வெறும் 0.2% மட்­டும்­தான்.