பின்டுலு: நூறு பேருக்குமேல் கொவிட்-19 தொற்று உறுதிப் படுத்தப்பட்டும் தவறான தொடர்புத் தகவல் காரணமாக அவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த முடியாமல் மலேசியாவின் சரவாக் மாநில சுகாதார அமைச்சு திணறி வருகிறது. இம்மாதம் 12ஆம் தேதி முதல் 21ஆம் தேதிக்குள் தொற்று உறுதிசெய்யப்பட்ட அவர்கள் யாரெனத் தெரியவில்லை என்று பின்டுலு எம்.பி. டியோங் கிங் செங் கூறினார். அவர்கள் அனைவரும் 24 மணி நேரத்திற்குள் பின்டுலு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வந்து, சிகிச்சை எடுத்துக்கொண்டு, தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
தொற்றுக்குள்ளான நூறு பேர் யாரெனத் தெரியவில்லை
1 mins read
-

