தோக்கியோ, ஒசாக்காவில் 3வது அவசரநிலை

தோக்கியோ, ஒசாக்காவில் 3வது அவசரநிலை

1 mins read
942b0f35-3065-4501-80a0-298ebab9fd8f
-

தோக்கியோ: ஜப்பானில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, தலைநகர் தோக்கியோவிலும் ஒசாக்கா, கியோட்டோ, ஹியோகோ ஆகிய மேற்கு மாநிலங்களிலும் நேற்று முதல் 3வது கொவிட்-19 அவசர நிலை நடப்பிற்கு வந்துள்ளது. இதையடுத்து, மது அருந்தும் வசதியுடன் கூடிய உணவகங்களும் திரை அரங்குகளும் தற்காலிகமாக மூடப்படுகின்றன. விளையாட்டு நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் இன்றி இடம்பெறும். இந்த நிலையில், தோக்கியோவிலும் ஒசாக்காவிலும் ஒருநாளைக்கு 10,000 பேர்வரை தடுப்பூசி போடும் வகையில் பெரிய அளவிலான தடுப்பூசி மையங்களைத் திறக்க ஜப்பான் பரிசீலித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில், நேற்று முன்தினம் அந்நாட்டில் புதிதாக 5,500 பேருக்குமேல் கொரோனா தொற்றிவிட்டது.

இதனிடையே, ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வோர் தங்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்குள் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் படி ஜப்பான் அரசு கேட்டுக் கொள்ளும் எனத் தெரிகிறது.