ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசி மலேசியாவில் பயன்படுத்தப்படும்

ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசி மலேசியாவில் பயன்படுத்தப்படும்

1 mins read
60231822-3ff9-4d16-aaae-2001f335f2c7
மலேசியாவில் 3.2 மில்லியன் பேருக்குப் போடத் தேவையான ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசி மே மாதத்தில் பெற இருக்கிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

ஆஸ்ட்ரஸெனிகா கொவிட்-19 தடுப்பூசி மலேசியாவில் பயன்படுத்தப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.

அந்தத் தடுப்பூசியை முழுமையாக ஆராய்ந்து மதிப்பிட்டதில், அதனால் ஏற்படும் தீமைகளைவிட நன்மைகளே அதிகம் என்பது தெரியவந்திருப்பதாகக் குறிப்பிட்டார் அவர்.

"60 மற்றும் அதற்கு அதிக வயதுடையவர்களுக்கு ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசி பயன்படுத்தப்படும்," என்று இன்று (ஏப்ரல் 26) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் 3.2 மில்லியன் பேருக்குப் போடத் தேவையான ஆஸ்ட்ரஸெனிகா தடுப்பூசி மே மாதத்தில் பெற இருக்கிறது.

இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிறிய எண்ணிக்கையிலானவர்களுக்கு ரத்தக் கட்டி ஏற்பட்டதால் பல ஐரோப்பிய நாடுகள் இந்த மருந்தின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

குறிப்புச் சொற்கள்