'மலேசியாவில் ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசி பயன்படுத்தப்படும்'

'மலேசியாவில் ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசி பயன்படுத்தப்படும்'

2 mins read
0d5056c4-d811-4d7e-90ca-ec87a6e28277
-

கோலா­லம்­பூர்: ஆஸ்ட்­ரா­ஸெ­னகா கொவிட்-19 தடுப்­பூசி மலே­சி­யா­வில் பயன்­ப­டுத்­தப்­படும் என சுகா­தார அமைச்­சர் டாக்­டர் ஆதம் பாபா தெரி­வித்­துள்­ளார்.

அந்­தத் தடுப்­பூ­சியை முழு­மை­யாக ஆராய்ந்து மதிப்­பிட்­ட­தில், அத­னால் ஏற்­படும் தீமை­க­ளை­விட நன்­மை­கள் அதி­கம் என்­பது தெரி­ய­வந்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார் அவர். 60 மற்­றும் அதற்கு அதிக வய­து­டை­ய­வர்­க­ளுக்கு ஆஸ்ட்ரா ஸெனகா தடுப்­பூசி பயன்­ப­டுத்­தப்­படும் என்று நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அவர் தெரி­வித்­தார்.

மலே­சியா3.2 மில்­லி­யன் மக்­க­ளுக்­குப் போடத் தேவை­யான ஆஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூ­சி­களை மே மாதத்­தில் பெற இருக்­கிறது.

இந்­தத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களில் சிறிய எண்­ணிக்­கை­யி­லா­ன­வர்­க­ளுக்கு ரத்­தக் கட்டி ஏற்­பட்­ட­தால் பல ஐரோப்­பிய நாடு­கள் இந்த மருந்­தின் பயன்­பாட்­டைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­துள்­ளன.

கொரோனா தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்து, சிலாங்­கூ­ரில் உள்ள 79 பள்­ளி­கள் நேற்­றும் இன்­றும் மூடப்­பட்­டுள்­ளன.

பெட்­டா­லிங் பெர்­டானா மாவட்­டத்­தில் 18 பள்­ளி­கள், ஹுலு லங்­காட் மாவட்­டத்­தில் 19 பள்­ளி­கள், கோம்­பாக் மாவட்­டத்­தில் 9 பள்­ளி­கள், பெட்­டா­லிங் உத்­தமா மாவட்­டத்­தில் 9 பள்­ளி­கள், கிள்­ளான் மாவட்­டத்­தில் 15 பள்­ளி­கள், செபாங் மாவட்­டத்­தில் 2 பள்­ளி­கள், ஹுலு சிலாங்­கூர் மாவட்­டத்­தில் 5 பள்ளி கள், கோலா லங்­காட் மாவட்­டத்­தில் 2 பள்­ளி­கள் என மொத்­தம் 79 பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ளன.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் 9ஆம் தேதி கல்வி அமைச்சு வெளி­யிட்ட அறி­விப்­பில், பள்­ளி­களில் ஒரு கொரோனா தொற்­றுச் சம்­ப­வம் பதி­வா­னா­லும்­கூட, பள்ளி யைச் சுத்­தி­க­ரிப்­ப­தற்­காக பள்­ளி­கள் உட­ன­டி­யாக மூடப்­பட வேண்­டும் எனக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அதே­போல பினாங்­கி­லும் 20 பள்­ளி­கள் நேற்று முதல் 2 நாள்

களுக்கு மூடப்­பட்­டுள்­ளன. மலே­சி­யா­வின் வேறு பகு­தி­க­ளி­லும் இதே கார­ணங்­க­ளுக்­காக பள்­ளி­கள் மூடப்­பட்­ட­தா­க­வும் செய்­தி­கள் வெளி­யா­கின.

இவ்­வாண்டு தொடக்­கம் இம்­மா­தம் 20ஆம் தேதி வரை முதல் நாடு முழு­வ­து­முள்ள பள்­ளி­களில் மொத்­தம் 4,868 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

நேற்று மலே­சி­யா­வில் 2,776 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில் 30 முதல் 84 வய­துக்­குட்­பட்ட 13 பேர் நேற்று உயி­ரி­ழந்­த­தா­கக் கூறப்­பட்­டது. அவர்­களில் ஒரு­வர் மட்­டும் வெளி­நாட்­ட­வர். கொவிட்-19 தொற்­றால் அங்கு இது­வரை 1,449 பேர் பலி­யா­கி­னர்.

உரு­மா­றிய கொரோனா பர­வ­லைத் தடுக்­கும் நோக்­கில் மலே­சியா, இந்­தி­யா­வுக்கு இடை­யே­யான விமா­னங்­க­ளுக்­குத் தற்­கா­லி­க­மா­கத் தடை விதிக்­கப்­ப­டு­வ­தாக மூத்த அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­தார்.