பலியானவர்களின் சடலங்களை மீட்டுத்தர உறவினர்கள் கோரிக்கை

பலியானவர்களின் சடலங்களை மீட்டுத்தர உறவினர்கள் கோரிக்கை

1 mins read
9577ff0e-e413-4d35-9151-a6e5dcfa9bef
லபுஹான் லாலாங் பகுதியில் உயிரிழந்த கடற்படை வீரர்களின் பெயர்கள் எழுதப்பட்ட மலர்வளையங்களைக் கடலில் அனுப்பி இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. கட­லுக்­க­டி­யி­லி­ருந்து வீரர்களின் சட­லங்­களை மேலே கொண்டு வரு­மாறு அதி­கா­ரி­களை அவர்­களது உறவினர்கள் கேட்­டுக்­கொண்­ட­னர். படம்: இபிஏ -

பாலி: கட­லுக்­குள் மூழ்கி, உடைந்­து­போன கேஆர்ஐ நங்­காலா-402 நீர்­மூழ்­கிக் கப்­ப­லின் உடைந்த பாகங்­க­ளை­யும் அந்த விபத்­தில் உயி­ரி­ழந்த 53 பேரின் சட­லங்­க­ளை­யும் அனைத்­து­லக அமைப்­பு­கள் நிபு­ணர்­க­ளின் உத­வி­யு­டன் எவ்­வாறு மீட்­பது என்­பது குறித்த ஆலோ­ச­னை­யில் நேற்று இந்­தோ­னீ­சிய கடற்­படை ஈடு­பட்­ட­தாக அதன் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

கடந்த புதன்­கி­ழமை கடற்­படைப் பயிற்சியில் ஈடு­பட்­டி­ருந்த அந்த நீர்­மூழ்­கிக் கப்­பல், கட­லுக்­க­டி­யில் கிட்­டத்­தட்ட 850 மீட்­டர் ஆழத்­தில் தரை­யில் குறைந்­தது மூன்று பாகங்­க­ளாக உடைந்து கிடந்­தது நேற்று முன்­தி­னம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இந்த விபத்­தில் உற­வி­னர்­களை இழந்­த­வர்­கள் நேற்று பாலி கடற்­க­ரை­யில் கூடி உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு இறுதி மரி­யாதை செலுத்­தி­னர். நீர்­மூழ்­கிக் கப்­பலை மேலே கொண்டு வரு­வது மிக­வும் சவா­லான காரி­யம் என்­றும் சிறப்பு உப­க­ர­ணங்­கள் தேவைப்­படும் என­வும் நிபு­ணர்­கள் தெரி­வித்­த­னர்.

இந்த விபத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளுக்கு இரங்­கல்­க­ளைத் தெரி­வித்த அதி­பர் ஜோக்கோ விடோடோ,

உயி­ரி­ழந்த அதி­கா­ரி­க­ளின் பிள்­ளை­

க­ளு­டைய கல்­விச் செலவை அர­சாங்­கம் ஏற்­றுக்­கொள்­ளும் என்­றார்.