மலேசியா: தடுப்பூசி வாங்க அறக்கட்டளை நிதியிலிருந்து பணம்

மலேசியா: தடுப்பூசி வாங்க அறக்கட்டளை நிதியிலிருந்து பணம்

1 mins read
94c6c233-bbcc-47c3-9373-2365695a0e5e
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் தடுப்­பூசி வாங்­கும் திட்­டத்­துக்கு தேசிய அறக்­கொடை நிதி­யி­லி­ருந்து செல­வி­டப்­படும் என்று நிதி அமைச்­சர் நேற்று தெரி­வித்­தார். அந்த அறக்­கட்டளை நிதிக்கு தேசிய எரிசக்தி நிறு­வ­ன­மான பெட்­ரோ­னாஸ் நிதி வழங்கி வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

அந்த நிதி­யி­லி­ருந்து பணம் எடுத்­துக்­கொள்­வது தொடர்­பான அவ­ச­ரச் சட்­டத்தை அர­சாங்­கம் நடப்­புக்­குக் கொண்டு வந்­தது. மாநி­லங்­க­ளின் உள்­கட்­ட­மைப்பு, மற்ற மேம்­பா­டு­க­ளுக்கு மத்­திய கடன் ஆத­ரவு அளிப்­ப­தற்­காக இந்த நிதி நிறு­வப்­பட்­டி­ருந்­தது.

அந்த நிதி­யி­லி­ருக்­கும் 19.5 பில்­லி­யன் ரிங்­கிட்­டி­லி­ருந்து 5 பில்­லி­யன் ரிங்­கிட் (S$1.6 பில்­லி­யன்) தொகை­யில் மக்­கள் தொகை­யில் 120 விழுக்­காட்­டி­ன­ருக்குப் போடும் அள­வுக்­கான தடுப்­பூ­சி­கள் வாங்க எடுக்­கப்­படும் என்று நிதி அமைச்­சர் ஸஃப்ருல் அஸிஸ் தெரி­வித்­தார்.

"நாட்­டின் பொரு­ளி­யல் மீட்­சி­ய­டைய தடுப்­பூசி முக்­கி­யம். எதிர்­கா­லச் சந்­த­தி­யி­ன­ரைப் பாது­காக்­கவே இந்த நிதி உரு­வாக்­கப்­பட்­டது," என செய்­தி­யா­ளர்­க­ளி­டம் ஸஃப்ருல் தெரி­வித்­தார்.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாத இறு­தி­யில் பெட்­ரோ­னாஸ் நிறு­வ­னம் அந்த நிதிக்கு 10.4 பில்­லி­யன் ரிங்­கிட் வழங்­கி­யது. எஞ்­சிய 9.1 பில்­லி­யன் ரிங்­கிட் தொகை­யா­னது முத­லீ­டு­க­ளி­லி­ருந்து பெறப்­பட்ட லாபம் என்­பதை அமைச்­சின் தர­வு­கள் காட்­டு­கின்­றன. இந்த ஆண்­டின் ஈவுத் தொகை­யாக 18 பில்­லி­யன் ரிங்­கிட்டை பெட்­ரோ­னாஸ் நிறு­வ­னம் இந்த ஆண்டு அர­சாங்­கத்­துக்கு வழங்­கும்.

மலே­சி­யா­வில் நேற்று முன்­தி­னம் நில­

வ­ரப்­படி 800,996 பேர் குறைந்­த­பட்­சம் ஒரு தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர்.

இந்­தோ­னீ­சியா, பிலிப்­பீன்­சுக்கு அடுத்­த­ப­டி­யாக தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் கடும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்கப்பட்ட நாடு

மலே­சியா.