இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பெருகி வரும் நிலையில், அங்கிருந்து வரும் பயணிகளுக்கு பயண ஆவணங்கள் வழங்குவதை தாய்லாந்து ரத்து செய்துள்ளது. புதுடெல்லியில் உள்ள தாய்லாந்து தூதரகம் வெளியிட்ட செய்தியில், தாய்லாந்து நாட்டவர்களைத் தவிர மற்றவர்கள் இந்தியாவிலிருந்து பயணம் செய்வதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாகக் குறிப்பிட்டது. இதற்கிடையே, இந்தியாவிலிருந்து பணக்காரர்கள் தனி விமானங்கள் மூலம் தாய்லாந்துக்கு வர யாரும் அனுமதி கோரவில்லை என தாய்லாந்து விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மே மாதத்தில் இந்தியாவில் உள்ள தாய்லாந்து மக்களை அழைத்துச் செல்ல நான்கு மீட்பு விமானங்கள் மே மாதத்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதிக்கும் தாய்லாந்து
1 mins read
-

