ஒரு மில்லியனைத் தாண்டியது பாதிப்பு

ஒரு மில்லியனைத் தாண்டியது பாதிப்பு

2 mins read
6b56f140-f22b-4f2f-9b3f-b8a742dd0902
-

மணிலா: பிலிப்­பீன்­சில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­

க­ளின் எண்­ணிக்கை ஒரு மில்­லி­ய­னைக் கடந்­துள்­ளது. இந்­தச் சூழ­லில், கொள்­ளை­நோய்ப் பர­வ­லைக் கட்­டுக்­குள் வைக்க தனி­மைப்­ப­டுத்­தல் கட்­டுப்­பா­டு­களை நடப்­பில் வைப்­பதா அல்­லது வேலை, நிறு­வன இழப்­பு­க­ளைச் சரி­செய்ய, பொரு­ளி­ய­லைத் திறந்­து­வி­டு­வதா என்­பது குறித்த விவா­தங்­கள் அங்கு எழுந்­துள்­ளன.

நேற்று பிலிப்­பீன்­சில் 9,000 புதிய கொரோனா தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யதை அடுத்து, அங்கு தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 1,006,428 ஆகி­யுள்­ளது. அங்கு தொற்­றால் கிட்­டத்­தட்ட 17,000 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

தென்­கி­ழக்­கா­சி­யா­வில் இரண்­டா­வது அலை­யில் இந்­தோ­னீ­சி­யா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக, மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது பிலிப்­பீன்ஸ்.

நாட்­டில் பதி­வான கிரு­மித்­தொற்று எண்­ணிக்­கை­யில் ஏறத்­தாழ பாதி மணிலா நக­ரில் பதி­வா­கி­யுள்­ளன என்­றும் அங்கு கடந்த மாத மத்­தியி­லி­ருந்து நடப்­பில் இருக்­கும் கடும் தனி­மைப்­ப­டுத்­தல் கட்­டுப்­பா­டு­க­ளால் தற்­போது கிரு­மிப் பர­வல் குறைந்­தி­ருப்­ப­தா­க­வும் தர­வு­கள் காட்­டு­கின்­றன. இருப்­பி­னும், இவ்­வ­ளவு விரைவில் கட்­டு­ப்பா­டு­க­ளைத் தளர்த்­து­வது குறித்து அதி­கா­ரி­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

நாட்­டின் பல நக­ரங்­களில் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இன்­ன­மும் நெருக்­கடி நில­வும் வேளை­யில், இன்­னும் ஓரிரு வாரங்­க­ளுக்கு விரி­வு­ப­டுத்­தப்­பட்ட சமூக தனி­மைப்­ப­டுத்­தலை நீட்­டிப்­பது நல்­லது என சுகா­தா­ரச் செய­லா­ளர் ஃபிரான்­சிஸ்கோ டக் குறிப்­பிட்­டார்.

மெட்ரோ மணிலா உட்­பட ஐந்து மாகா­ணங்­களில் மார்ச் மாதம் 29 முதல் ஏப்­ரல் 10ஆம் தேதி வரை கடு­மை­யான பொது­மு­டக்­கம் விதிக்­கப்­பட்­டது. இம்­மா­தம் 11ஆம் தேதி முதல் மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் 30ஆம் தேதி வரை நடப்­புக்கு வந்­தன.

கட்­டுப்­பா­டு­கள் நீட்­டிக்­கப்­ப­டு­வது குறித்த முடிவை அதி­பர் ரோட்­ரிகோ டுட்­டர்டே நாளை அறி­விப்­பார் என்று கூறப்­பட்­டது.