மனதை நெகிழவைக்கும் 'பிரியாவிடைப் பாடல்'

மனதை நெகிழவைக்கும் 'பிரியாவிடைப் பாடல்'

1 mins read
da9d71e9-05ce-40e5-8901-acbc4d56460c
கேஆர்ஐ நங்கலா-402 நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படை அதிகாரிகள் ஒன்றாகச் சேர்ந்து பாடும் காட்சி. இவர்களின் சடலங்களைத் தேடும் பணி தொடர்கிறது.படம்: இந்தோனீசிய ராணுவம் -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் கேஆர்ஐ நங்­கலா-402 நீர்­மூழ்­கிக் கப்­பல் கட­லுக்­குள் மூழ்கி உடைந்து­போ­னதை அடுத்து, அதில் இருந்த 53 பேரின்

சட­லங்­க­ளை­யும் நீர்­மூழ்­கிக் கப்­ப­லின் பாகங்­க­ளை­யும் மீட்­கும் பணி­கள் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­நி­லை­யில், அந்த நீர்­மூழ்­கிக் கப்­ப­லின் கடற்­படை அதி­கா­ரி­கள் ஒன்­றாக இணைந்து பாடிய பிரி­யா­வி­டை பாடலைக் காட்டும் காணொளி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. நீர்­மூழ்­கிக் கப்­ப­லில் இருந்­த­வாறு அவர்­கள் பாடி­ய­தைக் காணொளியில் பார்க்க முடிந்தது.

அண்­மை­யில் பதவி வில­கிய கடற்­ப­டைத் தள­ப­திக்கு அந்­தப் பாடல் அர்ப்­ப­ணிக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

அவ­ருக்­குப் பிரி­யா­விடை அளிக்­கும் வகை­யில் அந்­தப் பாடல் அமைந்­தது.

"உங்­க­ளை­விட்­டுச் செல்­ல­வும் நீங்­கள் இல்­லா­ம­லும் வாழ நாங்­கள் தயா­ராக இல்லை. இருப்­பி­னும், உங்­க­ளி­ட­மி­ருந்து விடை­பெற்­றுக்­கொள்­கி­றோம். உங்­க­ளுக்கு எங்­க­ளது வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்," என்ற பாடல் வரி­கள் காணொ­ளி­யைப் பார்ப்­ப­வ­ரின் மனதை நெகி­ழ­வைத்­தது.

தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளி­ட­மி­ருந்தும் இந்­தோ­னீ­சி­யா­வி­ட­மி­ருந்தும் அந்தக் கடற்­படை அதி­கா­ரி­கள் விடை­பெற்­றுக்­கொண்­டது ­போல அந்­தப் பாடல் அமைந்­துள்­ள­தாகப் பலர் கூறு­கின்­ற­னர்.