ஹனோய்: வியட்னாமின் வடக்குப் பகுதியில் உள்ள யென் பாய் மா
நிலத்தில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு இந்தியா
விலிருந்து வந்த பயணிகளே காரணம் என்று வியாட்னாமிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வியட்னாமுக்குச் சென்ற 11 இந்தியப்
பயணிகள் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஹோட்டல் ஊழியர் ஒருவருக்குக் கிருமி
பரவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதிக்குப் பிறகு வியட்னாமில் சமூக அளவிலான பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள
இந்தியப் பயணிகளில் நால்வருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

