அடி, உதை: நியூயார்க்கில் சீன ஆடவர் கவலைக்கிடம்

அடி, உதை: நியூயார்க்கில் சீன ஆடவர் கவலைக்கிடம்

1 mins read
d0282d45-8f34-4309-89fa-bf775527e2a8
-

நியூ­யார்க்: அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் 61 வயது சீனர் ஒரு­வர் தாக்­கப்­பட்­டார். இதை­ய­டுத்து அவ­ரது உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தாக தெரி­விக்­கப்­

பட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர் சீனா­வி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்­குக் குடி­

பெ­யர்ந்த திரு மா யாவ் பான் என அமெ­ரிக்க ஊட­கம் அடை­யா­ளம் கண்­டுள்­ளது.

மளி­கைப்­பொ­ருட்­கள் நிறைந்த தள்­ளு­வண்­டி­யைத் தள்­ளிக்­கொண்டு திரு மா சென்­று­கொண்­டி­ருந்­த­போது, ஆட­வர் ஒரு­வர்

அவ­ரைத் தாக்­கி­ய­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

முது­கில் அடிப்­பட்­ட­தும் திரு மா நடை­பா­தை­யில் மயங்கி விழுந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

மயங்கி விழுந்த திரு மாவின் தலையை அந்த ஆட­வர் மிதித்­தார். அதன் பிறகு, திரு மாவை அவர் பல­முறை உதைத்து அங்­கி­ருந்து தப்பி ஓடி­னார். இந்­தக் காட்­சி­

க­ளைக் காட்­டும் காணொ­ளியை போலி­சார் வெளி­யிட்­ட­னர்.

திரு மா நடை­பா­தை­யில் சுய­நி­னை­வின்றி கிடப்­ப­தைக் கண்ட பேருந்து ஓட்­டு­நர் ஆம்­பு­லன்சை அழைத்­தார்.

தாக்­கு­த­லின் கார­ண­மாக திரு மா கோமா­வில் இருப்­ப­தா­க­வும் அவ­ருக்­குச் செயற்கை சுவா­சக் கருவி பொருத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவ­ரது மனைவி தெரி­வித்­தார்.

திரு மாவைத் தாக்­கி­ய­வரை போலி­சார் தேடி வரு­கின்­ற­னர்.

இது இன­வா­தத் தாக்­கு­த­லாக இருக்­கக்­கூ­டும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

அண்­மை­யில் நியூ­யார்க்­கில் ஆசி­யர்­க­ளைக் குறி­வைத்து

தாக்­கு­தல்­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.