பெரியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட ஜெர்மனி திட்டம்

பெரியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட ஜெர்மனி திட்டம்

1 mins read
2af2b43e-7aea-421b-9d24-f5ab2e95a6fa
-

பெர்லின்: வரும் ஜூன் மாதத்துக்குள் பெரியவர்கள் அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி போட ஜெர்மனி திட்டமிட்டுள்ளது.

முதலில் வருபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடும் அணுகுமுறையை பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் அரசாங்கம் கைவிடுகிறது.

இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தோர் ஆகியோருக்குச் சலுகைகள் வழங்குவது குறித்தும் ஜெர்மனி அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்யாமல் கடைத்தொகுதிகளுக்குச் செல்வது சிகை அலங்கார நிலையங்களுக்குச் செல்வது போன்ற சலுகைகளை இவர்களுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசி போடும் திட்டத்தை ஜெர்மனி விரைவுப்படுத்துகிறது.