'அப்போலோ-11' விண்வெளி வீரர் மைக்கேல் கொலின்ஸ் காலமானார்

'அப்போலோ-11' விண்வெளி வீரர் மைக்கேல் கொலின்ஸ் காலமானார்

1 mins read
740a149b-0c2f-41fe-b34f-f6e308f03e50
நேற்று (ஏப்ரல் 28) காலமான மைக்கேல் கொலின்ஸுக்கு வயது 90. படம்: ஏஎஃப்பி -

நிலவுக்கு மனிதர்களை அனுப்பி அவர்களை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் விண்வெளிப் பயணத்திட்டம் 'அப்போலோ-11'. அதை இயக்கிய விண்வெளி வீரர் குழுவினரில் ஒருவரான மைக்கேல் கொலின்ஸ் நேற்று (ஏப்ரல் 28) காலமானார். அவருக்கு வயது 90.

புற்றுநோயை எதிர்த்து கொலின்ஸ் போராடியதாக அவரது குடும்பத்தார். தெரிவித்தனர். தனது இறுதி நாட்களை அமைதியாக குடும்பத்தினருடன் கழித்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூறினர்.

நிலவில் முதன்முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் சேர்ந்து நிலவுக்குப் பயணம் மேற்கொண்டவர் கொலின்ஸ். அந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 'அப்போலோ-11' பூமிக்கு திரும்பியதை உலகம் அன்று கொண்டாடியது.

சக விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி வைத்தபோது கொலின்ஸ் மட்டும் விண்கலத்தில் தனியாக இருந்தார்.

குறிப்புச் சொற்கள்