கனடா பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டப்படிப்புக்கான தலைமைப் பிரிவு உருவாக்க $3 மில்லியன் நிதி திரட்டு வெற்றிகரம்

கனடா பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டப்படிப்புக்கான தலைமைப் பிரிவு உருவாக்க $3 மில்லியன் நிதி திரட்டு வெற்றிகரம்

1 mins read
e9215a6b-7d84-4475-8e8d-0d88acb72e28
-

'யுனிவர்சிட்டி ஆஃப் டொராண்டோ ஸ்கார்போரோ' (University of Toronto Scarborough) என்ற கனடா பல்கலைக்கத்தில் தமிழ் பட்டப்படிப்புக்கான தலைமைப் பிரிவு உருவாக்க கனடா தமிழர்கள் $3 மில்லியன் நிதி தொகை திரட்டியுள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு நீடித்த இந்த முயற்சி 3,800க்கும் மேலான நன்கொடைகளை பெற்றது.

இந்தியா, இலங்கை நாடுகளுக்கு பின்னர் 'கிரேட்டர் டொராண்டோ' (Greater Toronto) பகுதி ஆக அதிகமான தமிழர்கள் வாழும் சமூகமாக இருக்கிறது.

கொவிட்-19 கிருமித்தொற்று சூழலில் இந்த நிதி திரட்டு முயற்சி மெய்நிகர் பாணியில் பல நிகழ்ச்சிகள் நடத்தியது உலக அளவில் பரவியது என்றார் கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் திரு சிவன் இளங்கோ.

இந்த நன்கொடைகள் மிகவும் தாராள மனதுடன் வழங்கப்பட்டவை என்றும் தமிழ் கலாசாரம், சமூகங்களுடன் மேலும் விரிவாக தொடர்புக்கொள்ள வாய்ப்பளிக்கும் என்றும் பல்கலைக்கழகத்தின் தலைவர் திரு விஸ்டம் டேட்டி கூறினார்.