ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்தில் தஞ்சம்

ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்தில் தஞ்சம்

2 mins read
35b2e020-b066-4648-9356-a7fb804e92af
-

மியன்மார் ராணுவத்திற்கும் கிளர்ச்சிப்படைகளுக்கும் கடும் மோதல்

மே சரி­யாங் (தாய்­லாந்து): மியன்­மா­ரில் கடந்த பிப்­ர­வரி 1ஆம் தேதி நடந்த ஆட்­சிக்­க­விழ்ப்பு நடந்­தது. அதைக் கண்­டித்து நாடு முழு­தும் ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இந்­நி­லை­யில் அந்­நாட்­டின் கேரன், கச்சின் ஆகிய சிறு­பான்­மை­யின கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கும் ராணு­வத்­தி­ன­ருக்­கும் இடை­யே­யான சண்டை தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

இதன் கார­ண­மாக மியன்­மா­ரில் தாய்­லாந்து எல்­லைப் பகு­தி­யில் வாழும் ஆயி­ரக்­க­ணக்­கான கேரன் இன மக்­கள் உயி­ருக்கு அஞ்சி தாய்­லாந்­திற்கு அடைக்­க­லம் நாடிச் சென்ற வண்­ணம் உள்­ள­னர்.

"பர்­மாக்­கா­ரர்­கள் எங்­க­ளைக் கண்­டால் சுட்­டுக் கொன்­று­வி­டு­வார்­கள். அத­னால்­தான் நாங்­கள் குடும்­பத்­து­டன் நாட்டை விட்டு ஓட வேண்­டி­யி­ருந்­தது," என்று தாய்­லாந்­துக்கு அடைக்­க­லம் நாடி வந்த மக்­கள் கூறு­வ­தாக கேரன் கிரா­ம­வா­சி­யான திரு சு வா என்­ப­வர் ராய்ட்­டர்­ஸ் செய்தியாளரிடம் கூறி­னார். "தாய்­லாந்து எல்­லை­யில் உள்ள சல்­வீன் ஆற்­றைக் கடந்­து­தான் நாங்­கள் தாய்­லாந்தை அடைந்­தோம்," என்­றார் திரு சு வா.

மியன்­மா­ரில் சல்­வீன் ஆற்­றோ­ரப் பகு­தி­யில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் தஞ்­சம் அடைந்த வண்­ணம் உள்­ள­னர். அப்­ப­கு­தி­யில் ராணு­வத்­தி­ன­ருக்கு கேரன் போரா­ளி­க­ளுக்­கும் சண்டை மூளும்­போது அங்­குள்ள மக்­கள் ஆற்­றின் குறுக்கே நடந்­து­சென்று தாய்­லாந்­துக்கு அடைக்­கா­லம் நாடிச் செல்­கின்­ற­னர் என்று கேரன் சிறு­பான்­மை­யின ஆத­ர­வுக் கட்­ட­மைப்­புக்­குழு ஒன்று தெரி­வித்­தது. வரும் நாட்­களில் 8,000க்கு மேற்­பட்ட கேரன் இனத்­த­வர் சல்­வீன் ஆற்­றைக் கடந்து தாய்­லாந்­துக்கு அடைக்­க­லம் நாடிச் செல்­ல­வி­ருக்­கின்­ற­னர். அவ்­வாறு தாய்­லாந்­துக்கு வரும் கேரன் இன மக்­க­ளை தாய்­லாந்து ராணு­வம், அவர்­க­ளைத் திருப்பி அனுப்­பா­மல் காப்­பாற்­றி உதவும் என நம்­பு­வ­தாக அந்த அமைப்பு தனது ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்­துள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கேரன் இனப் போரா­ளி­கள் சல்­வீன் ஆற்­றுக்கு அரு­கே­யுள்ள மியன்­மா­ரின் ராணுவ முகாம் ஒன்­றைத் தாக்­கி­யது.

அந்­தத் தாக்­கு­த­லில் 13 ராணுவ வீரர்­களும் மூன்று போரா­ளி­களும் கொல்­லப்­பட்­ட­னர். அதை­ய­டுத்து மியன்­மார் ராணு­வம் தாய்­லாந்து எல்­லை­யில் பல இடங்­களில் வான்­வெ­ளித் தாக்­கு­தல் நடத்­தி­யது. இத­னை­ய­டுத்து அப்பகுதியில் தஞ்­ச­ம­டைந்த கேரன் இன மக்­கள் ஆற்­றைக் கடந்து தாய்­லாந்­துக்கு அடைக்­க­லம் நாடும் கட்­டா­யத்­திற்கு ஆளாக்­கப்­பட்­டுள்­ள­னர். இது­வ­ரை­யில் 2,267 பேர் தாய்­லாந்­துக்கு அடைக்­க­லம் நாடி வந்­துள்­ள­தாக தாய்­லாந்­தின் வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார். தாய்­லாந்து தனது எல்­லை­களில் ராணு­வத்­தி­னரை நிறுத்தி, அக­தி­கள் நுழை­வ­தற்­குத் தடை­விதித்­துள்­ளது.

தாய்­லாந்­துக்­குள் மியன்­மார் மக்­கள் நுழை­வதை தாய்­லாந்­தின் பாது­காப்­புப் படை­யி­னர் தடுத்து வரு­கின்­ற­னர். இத­னால் அம்­மக்­கள் பெரும் அவ­திக்­குள்­ளா­கி­யுள்­ள­னர். கேரன் இனக் கிளர்ச்­சி­யா­ளர்­கள் தவிர்த்து இன்­னொரு சிறு­பான்­மை­யி­னக் குழு­வி­ன­ரான கச்­சின் எனும் இனத்­தைச் சேர்ந்த கிளர்ச்­சி­யா­ளர்­க­ளின் படை­க­ளுக்­கும் மியன்­மார் ராணு­வத்­தி­ன­ருக்­கும் இடை­யே­யும் கடு­மை­யான சண்டை மூண்­டுள்­ளது.

கேரன், கச்­சின் ஆகிய இரு சிறு­பான்­மை­யி­னக் குழு­வி­ன­ரோடு மேலும் சில சிறு­பான்­மை­யின கிளர்ச்­சிக்­கு­ழுக்­க­ளின் படை­களும் மியன்­மா­ரின் ஜன­நா­யக ஆட்­சிக்கு ஆத­ர­வாகவும் ராணுவத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வரு­கின்­றன.