செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
adb58051-839c-4966-ac12-2156d5345bf5
-

இஸ்­ரேல்: சம­ய­விழா கூட்ட

நெருக்­க­டி­யில் சிக்கி 44 பேர் பலி

ஜெரு­ச­லம்: இஸ்­ரே­லில் நேற்று சமய விழா அனு­ச­ரிக்­கப்­பட்­டது. மவுண்ட் மெரோ­னில் நடை­பெற்ற இந்த விழா­வில் ஆயி­ரக்­கணக்­கா­னோர் கலந்­து­கொண்­ட­னர். குறு­கலான இடத்­தில் ஏரா­ள­மா­னோர் ஒன்றுதிரண்­ட­தால் ஏற்­பட்ட நெரி­ச­லில் ஒரு­வர் மீது ஒரு­வர் விழுந்­த­தில் 44 பேர் மாண்­ட­னர்.

இரண்­டாம் நூற்­றாண்­டில் வாழ்ந்த துற­வி­யான ரேபாய் ஷிமோன் பார் யோச்­சாய் என்­ப­வரின் நினைவுநாளை யொட்டி, அவ­ரது கல்­ல­றை­யில் ஆயி­ரக்­க­ணக்­கான யூதர்­கள் ஒன்றுதிரண்டு இர­வு­நேர வழி­பாட்­டில் ஈடு­பட்­ட­னர். அப்­போது இந்­தத் துய­ரச் சம்­ப­வம் நடந்­தது.

இந்­தச் சம்­ப­வத்தை அந்­நாட்டு பிர­த­மர் பெஞ்­ச­மின் நெட்­டன்­யாகு மோச­மான துய­ரச்­சம்­ப­வம் என்று கூறி­யுள்­ளார். சிறு­வர்­கள் உள்­ளிட்ட நூற்­றுக்கு மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர். அவர்­கள் ஹெலி­காப்­டர் உத­வி­யு­டன் மருத்துவமனையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

கொவிட்-19 பர­வல் கார­ண­மாக இந்த விழா­வுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. இப்போது அங்கு

50 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தா­லும் தொற்று குறைந்­ததை அடுத்­தும் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.

ஹாங்­காங்­கில் உரு­மா­றிய கொரோனா

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் முதன்­மு­த­லாக உரு­மா­றிய கொரோனா தொற்று ஒரு­வ­ரைப் பாதித்­துள்­ளது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந்த வகைத்தொற்று எளி­தில் வேக­மா­கப் பரவக்­கூ­டி­யது என்று கூறப்­ப­டு­கிறது.

பாதிக்­கப்­பட்­ட­வர் 39 வயது பணிப்­பெண் என்­றும் அவருக்கு 10 மாதக் கைக்­கு­ழந்தை ஒன்று இருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ரி­டம் காணப்­பட்ட தொற்று 'என்501ஒய்' வகை­யைச் சேர்ந்­தது என உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஹாங்­காங்­கின் சுகா­தா­ரப் பாது­காப்பு நிலை­யம் ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது. அந்­தப் பணிப்­பெண் தங்­கி­ இருந்த குடி­யி­ருப்­புத் தொகு­தி­யில் வசிக்­கும் அனைத்து குடியி­ருப்­பா­ளர்­களும் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ளு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

கட்டுப்பாட்டைத் தளர்த்துகிறது பிரான்ஸ்

பாரிஸ்: கொவிட்-19 நெருக்­க­டி­யால் மூடப்­பட்­டி­ருந்த உண­வ­கங்­கள், கேளிக்கை விடு­தி­கள், கலா­சார நிகழ்ச்­சி­கள் மற்றும் வர்த்­த­கங்­கள் போன்­றவை மீண்­டும் செயல்­ப­டு­வ­தற்கு மே 19 ஆம் தேதி முதல் படிப்­ப­டி­யாக அனு­மதி அளிக்­கப்­படும் என அந்­நாட்டு அதி­பர் இம்­மா­னு­வல் மெக்­ரோன் தெரி­வித்­துள்­ளார். ஆனால் சிற்­றுண்­டிச் சாலை­களும் உண­வ­கங்­களும் ஜூன் 9ஆம் தேதி வரை காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­கும் என்று கூறி­னார்.

பிரான்­சில் ஏற்­பட்ட மூன்­றா­வது தொற்று அலை­யைத் தொடர்ந்து மூன்று முறை தேசி­ய­ள­வில் முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டது. அங்கு தொற்­றுப் பாதிப்­பால் கடந்த 24 மணி நேரத்­தில் 324 மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. இந்த எண்­ணிக்­கை­யு­டன் இது­வரை 103,947 மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

தொற்­றுப்பதிவு எண்­ணிக்கை கடந்த மாதத்­து­டன் ஒப்பிடு­கை­யில் சரா­சரி 40,000ல் இருந்து 27,000 ஆகக் குறைந்­துள்­ளது.

தொடக்­கப்­பள்­ளி­கள் மூன்று வாரங்­கள் மூடப்­பட்­ட­தற்­குப் பின் இந்த வாரம் திங்­கள்­கி­ழமை திறக்­கப்­பட்­டன. உயர்நிலைப் பள்­ளி­கள் அடுத்த வாரம் திறக்­கப்­ப­ட­வுள்­ளன. அதேபோல் உள்­நாட்­டுப் பய­ணங்­க­ளுக்கு இருந்த தடை­களும் அகற்­றப்­படும்.

இருப்­பி­னும், தொற்று நம்­மைப் பாதிக்­காத வகை­யில் கவ­ன­மா­க­வும் பாது­காப்­பா­க­வும் இருக்­க­வேண்­டும் என்று அதி­பர் இமா­னு­வல் தெரி­வித்­தார்.