தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துருக்கியில் அமளி

1 mins read
103d7c65-6032-4566-b6f7-4132d0a1f841
-

இஸ்தான்புல்: துருக்கியில் கொவிட்-19 பாதிப்பு மோசமாக இருப்பதால் இம்மாதம் 17ஆம் தேதி வரை முழு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசிய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மாநிலங்களுக்கிடையிலான பயணத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மே தினத்தை முன்னிட்டு நேற்று துருக்கியிலேயே ஆகப் பெரிய நகரான இஸ்தான்புலில் பெரிய அளவிலான பேரணி நடத்தப்பட்டது.

பலர் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதைத் தடுக்க போலிசார் நடவடிக்கை எடுத்தபோது அவர்களுக்கும் பேரணியில் பங்கெடுத்தவர்களுக்கும் இடையே கைகலப்பு மூண்டது.

படம்: ஏஎஃப்பி