ஏப்ரல் மாதம் பிரேசலில் 82,000 உயிரிழப்புகள்

1 mins read
ee23e0dc-bc09-4069-a54d-92611e1e7474
-

ரியோ டி ஜெனிரோ: நேற்று முன்தினம் நிலவரப்படி கொவிட்-19 காரணமாக பிரேசிலில் மேலும் 2,595 பேர் மாண்டனர்.

இதன்மூலம் கடந்த மாதம் கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிரேசிலில் மொத்தம் 82,266 உயிரிழந்துவிட்டனர்.

கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா காரணமாக 66.573 பேர் மாண்டதாக பிரேசிலிய சுகாதார அமைச்சு புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

212 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட பிரேசிலில் கொவிட்-19 காரணமாக மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 400,000ஐ தாண்டியுள்ளது.

இது ஒவ்வொரு 100,000 பேருக்கு 189 மரணங்களுக்குச் சமம்.

இந்நிலையில், கூடுதல் தடுப்பூசிகளைப் பெற பிரேசில் முயன்று வருகிறது.

அதே வேளையில் அதிபர் ஜயிர் பொல்சொனாரோவின் அரசாங்கம் எடுத்த முடிவுகள் நிலைமை மோசமடையச் செய்துள்ளதாக என்பதைக் கண்டறிய பிரேசிலின் நாடாளுமன்றம் விசாரணை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.