கோலாலம்பூர்: கடந்த இரண்டு வாரங்களாக மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் நடை
முறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்
பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்துள்ளார்.
அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்
படக்கூடும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.
அண்மைய நாட்களில் தலை
நகர் கோலாலம்பூர், சிலாங்கூர் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது.
"கொவிட்-19 பாதிப்பு மலேசியாவிலும் மற்ற நாடுகளிலும் அதிகரித்து வருகிறது. நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் கிருமிப் பரவலைத் தடுக்க போதுமானவையா என்பதை உறுதி செய்ய இந்த மறுபரிசீலனை முக்கியம்," என்று பிரதமர் முகைதீன் கூறினார். அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களை அடையாளம் காணவும் கிருமிப் பரவலுக்கான காரணங்
களைக் கண்டுபிடிக்கவும் பிரத்தியேக அணுகுமுறையைத் தமது அரசாங்கம் கடைப்பிடித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
"நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ளுமாறும் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் சமூகத்தையும் பாதுகாக்க கூட்டமான இடங்களைத் தவிர்க்கு மாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்," என்றார் திரு
முகைதீன்.
இதற்கிடையே, தலைநகர் கோலாலம்பூருடன் சிலாங்கூர், பினாங்கு, ஜோகூர், கெடா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் முதல் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைப் பிறப்பிக்குமாறு தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் தமது அமைச்சு பரிந்துரை செய்திருப்பதாக மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் மலேசிய சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நிலவரப்படி மலேசியாவில் மேலும் 3,788 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. கடந்த இரண்டரை மாதங்களில் இதுவே ஆக அதிகமான பாதிப்பு.
கடந்த மாதம் 15ஆம் தேதியன்று அன்றாடப் பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாக 2,000ஐ கடந்தது. அதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து
அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் நடுப்பகுதியில் இருந்த நிலையைவிட பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது.
மலேசியாவில் நேற்று முன்தின நிலவரப்படி கிட்டத்தட்ட 30,000 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி மேலும் 2,881 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
இதன்மூலம் மலேசியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411,594ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மலேசியாவில் அவசரநிலை
பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கிருமிப் பரவலை எதிர்கொள்ள இது உதவும் என்று மலேசிய அரசாங்கம் கூறுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வரை அவசரநிலை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மலேசியாவில் உயர்நிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது
பொருளியல் பலவீனம் அடைவது தொடர்பாகவும் வேலை இழப்பு தொடர்பாகவும் கவலை எழுந்ததை அடுத்து, சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில் கொவிட்-19 பாதிப்பு மோசமடைந்து வருவதால் மாநிலங்களிடையே பயணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்கிறது.
தற்போதைய நிலவரப்படி வடகிழக்கு மாநிலமான கிளந்தானில் மட்டுமே முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடப்பில் உள்ளது. மற்ற பல மாநிலங்களில் நிபந்தனைகளுடனான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு விதிக்கப் பட்டுள்ளது.

