27 ஆண்டுகளுக்குப் பிறகு மணமுறிவு கோரும் கேட்ஸ் தம்பதி

வாஷிங்­டன்: உல­கின் மிக­வும் செல்­வாக்­கு­மிக்க அறக்­கொ­டை­யா­ளர்­க­ளான பில் கேட்ஸ் - மெலிண்டா தம்­பதி திரு­ம­ண­மாகி 27 ஆண்டு

களுக்­குப் பிறகு மண­மு­றிவு கோரி விண்­ணப்­பித்­துள்­ள­னர்.

"மிகுந்த யோச­னைக்­குப் பிறகு திரு­மண பந்­தத்தை முறித்­துக்­கொள்ள முடிவு செய்­தோம்," என அந்­தத் தம்­பதி தங்­க­ளு­டைய டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.

"அரு­மை­யான மூன்று பிள்ளை

களை வளர்த்­தி­ருக்­கி­றோம், அனைத்­து­லக அள­வில் மக்­கள் சுகா­தா­ர­மான, திறன் மிகுந்த வாழ்க்கை வாழ்­வ­தற்கு உத­வும் விதத்­தில் ஓர் அறக்­கட்­ட­ளையை உரு­வாக்­கி­யுள்­ளோம்," என்று அவர்­க­ளது அறிக்கை தெரி­வித்­தது.

"எங்­க­ளது வாழ்­வின் அடுத்த கட்­டத்­தைத் தம்­ப­தி­யாக இணைந்து தொடர முடி­யாது என நம்­பு­கிறோம்," என்று குறிப்­பிட்ட அவர்­க­ளது அறிக்­கை­யில், இந்­தப் புதிய வாழ்க்­கைப் பாதை­யில் பய­ணிக்­கும் தம் குடும்­பத்­துக்­குத் தனிமை தேவைப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

சியாட்­ட­லில் உள்ள கிங் கவுன்டி சுப்­பீ­ரி­யர் நீதி­மன்­றத்­தில் சமர்ப்­பித்த கூட்டு விண்­ணப்­பத்­தில், "மீண்­டும் சரிப்­ப­டுத்த முடி­யாத அள­வுக்கு திரு­மண பந்­தம் முறிந்­து­போ­யுள்­ளது," என்று குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.

சொத்­து­க­ளைப் பகிர்­வது பற்றி ஒப்­பந்­தத்­துக்கு தாங்­கள் வந்­தி­ருப்­ப­தா­க­வும் அதனை நீதி­மன்­றம் ஆமோ­திக்க வேண்­டும் என­வும் கேட்­டுக்­கொண்ட அவர்­கள், சொத்து விவ­ரம் பற்றி விரி­வா­கத் தெரி­விக்­க­வில்லை.

தம்­ப­தி­யின் இளைய பிள்­ளைக்கு அண்­மை­யில் 18 வயது பூர்த்­தி­

யா­னது.

மைக்­ரோ­சா­ஃப்ட் நிறு­வ­னத்­தின் இணை நிறு­வ­ன­ரான திரு பில் கேட்ஸ், 65, உல­கப் பணக்­கா­ரர்­கள் பட்­டி­ய­லில் நான்­கா­வது இடத்­தில் இருக்­கி­றார்.

அவ­ரது மனைவி மெலிண்­டா­வுக்கு வயது 56. முன்­னாள் மைக்­ரோ­சா­ஃப்ட் மேலா­ள­ரான அவர் உல­க­ளா­விய சுகா­தா­ரம், பெண் சமத்­து­வம் போன்­ற­வற்­றுக்­காக குரல் கொடுத்­தார். அறநிறு­வ­னத்தை திரு கேட்­சு­டன் இணைந்து நடத்தி வந்­தார் அவர்.

உல­க­ளா­விய சுகா­தா­ரம், பரு­வ­நிலை மாற்­றத்­துக்கு எதி­ரான போர், அமெ­ரிக்­கா­வில் கல்­வியை மேம்­

ப­டுத்­து­வது போன்­ற­வற்­றுக்­காக தம்­பதி அமைத்த அறக்­கொடை நிறு­வ­னத்தை நடத்­து­வ­தில் இரு­வ­ரும் தொடர்ந்து செயல்­ப­டு­வர் என்று கூறப்­பட்­டது.

கடந்த 2000ஆம் ஆண்­டில் தோற்­று­விக்­கப்­பட்ட லாப­நோக்­கற்ற 'பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்' அற­நி­று­வ­னம், அனைத்­து­லக அள­வில் ஆகப் பெரிய அற­நி­று­வ­ன­மா­க­வும் திகழ்­கிறது. 2019ஆம் ஆண்டு நில­வ­ரப்­படி, அந்த அற நிறு­வ­னத்­தின் சொத்து மதிப்பு 43.3 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர்­கள் (S$57.7 பில்­லி­யன்).

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!