துபாய்: வெளிநாடுகளிலிருந்து ஹஜ் புனிதப் பயணத்துக்கு வருவோருக்குத் தடை விதிப்பது குறித்து சவூதி அரேபியா ஆலோசனை செய்து வருகிறது. ஆனால் அது குறித்த இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை.
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டும் ஹஜ் புனிதப் பயணத்துக்கு வெளிநாட்டினருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
புனிதப் பயணத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு கொவிட்-19 தொற்று ஏற்பட்டு குணமடைந்த அல்லது தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட உள்நாட்டினர் மட்டுமே அனுமதிக்கப்படக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பிட்டது.

