நியூசிலாந்து பேரங்காடியில் கத்திக்குத்து; ஐவர் காயம்

நியூசிலாந்து பேரங்காடியில் கத்திக்குத்து; ஐவர் காயம்

1 mins read
d03798dc-0146-40e5-8f46-3aa99ff9aa8c
-

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தில் உள்ள பேரங்­காடி ஒன்­றில் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லில் ஐந்து பேர் காய­முற்­ற­னர்.

அவர்­களை ஆட­வர் ஒரு­வர் கத்­தி­யால் குத்­திக் காயப்­ப­டுத்­தி­னார்.

பாதிக்­கப்­பட்­டோ­ரில் மூன்று பேரின் உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இருப்­பி­னும், இது பயங்­க­ர­வாத தாக்­கு­தல் அல்ல என்று

அந்­நாட்­டுப் பிர­த­மர் ஜெசிண்டா ஆர்­டன் தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய டன­டின் நக­ரில் இத்­தாக்­கு­தல் நடத்­திய ஆட­வரை போலி­சார் கைது செய்­த­னர்.

அந்த ஆட­வர் இரண்டு கத்­தி ­களுடன் பேரங்­காடி ஊழி­யர்­

க­ளைத் தாக்­கி­ய­தா­க­வும் அவ­ரைத் தடுக்க முற்­பட்ட வழிப்­போக்­கர்­களும் காய­ம­டைந்­த­தா­க­வும் சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­கள் நியூ­சி­லாந்து ஊட­கத்­தி­டம் தெரி­வத்­த­னர்.

பேரங்­கா­டி­யில் இருந்­த­வர்­களை அந்த நபர் தாக்­கி­ய­போது அவர்­க­ளுக்கு உதவி செய்ய விரைந்த வழிப்­போக்­கர்­க­ளின் வீரத்தை பிர­த­மர் ஆர்­டன்

பாராட்­டி­னார்.

தாக்­கு­த­ல் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட பேரங்­கா­டி­யின் ஊழி­யர்­கள் அதிர்ச்­சி­ய­டைந்­தி­ருப்­ப­தாக அப்­பே­ரங்­கா­டி­யின் நிர்­வாக

இயக்­கு­நர் ஸ்பென்­சர் சென் தெரி­வித்­தார்.