மோதல்; காஸா, இஸ்ரேலில் 30 பேருக்கு மேல் பலி

மோதல்; காஸா, இஸ்ரேலில் 30 பேருக்கு மேல் பலி

2 mins read
175e4704-4240-45bd-a872-c1364a91eda9
பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா வட்டாரத்தின் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியதில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று தரைமட்டமானது. படம்: ஏஎஃப்பி -

காசா/ ஜெரு­ச­லம்: இஸ்­ரே­லுக்­கும் ஹமா­சுக்­கும் இைடயி­லான சண்டை நேற்று முன்­தி­னம் உச்­சக்­கட்­டத்தை எட்­டி­யது. இரு தரப்­பி­ன­ரும் மாறி மாறி வான் வழித் தாக்­கு­தலை நடத்­தி­னர். இதில் இரு தரப்­பி­லும் உயிர்ச்­சே­தம் ஏற்­பட்­டுள்­ளது. முப்­பதுக்­கும் மேற்­பட்­டோர் கொல்­லப்­பட்­ட­னர் என்று தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

புதன்­கி­ழமை விடி­யற்­காலை இஸ்­லா­மிய அமைப்­பு­களும் இதர பாலஸ்­தீன போரா­ளி­கள் அமைப்­பு­களும் இஸ்­ரே­லின் டெல் அவிவ், பியர்­ஷெபா மீது பல முறை ஏவு­க­ணை­க­ளைப் பாய்ச்சி தாக்­கு­த­லைத் தொடுத்­த­னர். இஸ்­ரே­லும் நூற்றுக்­க­ணக்­கான ஆகா­யத் தாக்­கு­தலை நடத்தி பதி­லடி கொடுத்­தது. இதில் காஸா­வில் உள்ள குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் ஒன்று இடிந்து விழுந்­தது. இஸ்­ரே­லின் அடுத்­த­டுத்த தாக்­கு­த­லில் மற்­றொரு கட்­ட­ட­மும் சேத­ம­டைந்­தது. உள­வுத் துறை நிலை­யங்­கள், ஏவு­க­ணை ஏவுத் தளங்­கள் உள்­ளிட்ட ஹமாஸ் இலக்­கு­களை மட்­டுமே குறி வைத்­துத் தாக்­கு­வ­தாக இஸ்­ரேல் குறிப்­பிட்­டது.

இஸ்ேரல் மீது பாலஸ்­தீன போரா­ளி­கள் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட ஏவு­க­ணை­க­ளைப் பாய்ச்­சி­ய­தாக இஸ்­ரே­லிய ராணு­வம் தெரி­வித்­தது.

ஏறக்­கு­றைய 850 ஏவு­க­ணை­கள் இஸ்­ரேல் நிலப் பகு­தி­களில் விழுந்­தி­ருக்­க­லாம் அல்­லது தற்­காப்பு முறை மூலம் இடை­ம­றிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்று ராணு­வப் ேபச்­சா­ளர் ஜோன­தன் கன்­ரி­கஸ் கூறி­னார். காஸா வட்­டா­ரத்­தி­லும் 200 ஏவு­க­ணை­கள் விழுந்­துள்­ள­தாக அவர் சொன்­னார்.

இது, 2014ல் காஸா­வில் நடந்த உக்­கி­ர­மான போருக்­குப் பிறகு இஸ்­ரே­லுக்­கும் ஹமா­சுக்­கும் இடையே நடந்த மிகப்­பெ­ரிய தாக்கு­ த­லா­கும். இந்த மோதல் அனைத்­து­லக அள­வில் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஐநா மத்­திய கிழக்கு அமைதி தூத­ரான டோர் வென்­னஸ்­லேண்ட் வெளி­யிட்ட டுவிட்­டர் பதி­வில், "உட­ன­டி­யாக சண்­டையை நிறுத்த வேண்­டும். இல்­லை­யென்­றால் முழுப் போருக்கு இட்­டுச் செல்­லும். எல்­லாத் தரப்­பி­லும் உள்ள தலை­வர்­கள் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும்," என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார். அமை­தியை நிலை­நாட்ட அனைத்­துத் தரப்­பி­ன­ரு­டன் ஐநா சேர்ந்து செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார். இதற்­கி­டையே பாலஸ்­தீன மக்­கள் மீது இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு அதி­கா­ரி­கள் தொடர்ந்து தாக்குவதற்கு இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு நிறு­வ­னம் கண்­ட­னம் தெரி­வித்து உள்­ளது