மலேசியாவில் கொவிட்-19க்கு 39 பேர் மரணம்

மலேசியாவில் கொவிட்-19க்கு 39 பேர் மரணம்

1 mins read
ee15d541-e6fd-4fe3-9736-5c52237eb0d6
-

புத்­ரா­ஜெயா: மலே­சி­யா­வில் மூன்று மாதங்களில் இல்­லாத அள­வுக்கு கொவிட்-19 மர­ணங்­கள் ஏற்­பட்­டுள்­ளன.

நேற்று ஒரே நாளில் மட்­டும் 39 பேர் உயி­ரி­ழந்­த­னர். இதற்கு முன்பு கடந்த ஞாயிற்­றுக்கிழமை ஆக அதிகமாக 29 பேர் மர­ண­ம­டைந்­த­னர். புதி­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் சேர்த்து மலே­சி­யா­வில் மொத்­தம் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 1,761க்கு அதி­க­ரித்­துள்­ளது.

புதன்­கி­ழமை அன்று 4,765 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. இவர்­க­ளு­டன் சேர்த்து 453,222 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த 24 மணி நேரத்­தில் சிலாங்­கூ­ரில் மட்­டும் 2,082 பேருக்கு தொற்று ஏற்­பட்­டுள்­ளது என்­றும் கோலா­லம்­பூ­ரில் 540 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர் என்­றும் சுகா­தார அமைச்­சின் தலை­மைச் செய­லா­ளர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரி­வித்­தார்.

கடந்த சில வாரங்­க­ளாக தொற்றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன. இத­னால் கொவிட்-19க்கு எதி­ராக பெரும் போராட்­டத்தை அரசு தொடங்­கி­யுள்­ளது.

நேற்று முதல் ஜூன் 7ஆம் தேதி வரை 27 நாட்­க­ளுக்கு நட­மாட்­டக் கட்­டுப்­பாடு அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் நாள்ேதா­றும் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை 6,000லிருந்து 7,000 வரை அதி­க­ரிக்­கும் என்று மருத்­துவ நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.