செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2876d8b2-8f72-4562-a30a-bee43fbd6c30
-

பயண ஏற்பாட்டை விரிவுபடுத்த தயாராகும் நியூசிலாந்து

வெலிங்டன்: கொவிட்-19க்குப் பிந்திய உலகத்துடன் மீண்டும் இணையும் முயற்சியாக மேலும் பல நாடுகளுடன் பாதுகாப்பான பயண ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து

நியூசிலாந்து அரசாங்கம் ஆராயும் என்று அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

"ஆஸ்திரேலியா, தெற்கு பசிபிக்கின் குக் தீவு ஆகிய

வற்றைத் தொடர்ந்து, அடுத்ததாக நியூவ் தீவுடன் தனிமைப்

படுத்தல் இல்லாத பயண ஏற்பாடு தொடங்கப்படும். அதோடு, ஐரோப்பா, அமெரிக்கா, சீனா மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளுடனும் வர்த்தக ரீதியிலான பயண ஏற்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது," என்றார் அவர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களுக்கு $1 மில்லியன் பரிசு

வாஷிங்டன்: கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை முன் வரவைப்பதற்காக, அமெரிக்காவின் ஓஹையோ மாநில ஆளுநர் மைக் டிவைன், அதிர்ஷ்ட குலுக்கல் பரிசை அறிவித்துள்ளார். ஒரு வாரத்திற்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு என ஐந்து வாரங்களுக்கு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குலுக்கலில் பங்குபெற குறைந்தது ஒருமுறையாவது கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

தைவானில் ஆக அதிக தொற்று

தைப்பே: தைவானில் நேற்று புதிதாக 16 பேர் தொற்றுக்கு ஆளானதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் கடுமை

யாக்கப்பட்டுள்ளன. ஒருமுறைகூட முழுமையான முடக்க

நிலைக்குச் செல்லாத தைவானில் இது அங்கு பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.

எனவே உடற்பயிற்சிக் கூடங்களில் 100 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதி. நூலகங்கள், இணையத்தள மையங் களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அத்தியாவசியமற்ற வர்த்தகங்கள் மூடப்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தைவானில் இதுவரை 1,231 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.