தாய்லாந்து சிறைச்சாலைகளில் கிருமிப் பரவல்; அன்றாட எண்ணிக்கை புதிய உச்சம்

தாய்லாந்து சிறைச்சாலைகளில் கிருமிப் பரவல்; அன்றாட எண்ணிக்கை புதிய உச்சம்

1 mins read
6f9f9dad-80d8-43f6-b010-37708dd1e4d0
-

பேங்காக்: பேங்காக் சிறைச்சாலைகள் புதிய கிருமித்தொற்று குழுமங்களாக உருவெடுத்துள்ள நிலையில், அங்கு தொற்றுக்கு ஆளானவர்களின் அன்றாட எண்ணிக்கை ஆக அதிகமாக பதிவாகியுள்ளது.

நேற்று அங்கு 4,887 பேர் தொற்றுக்கு ஆளாகினர். அதில் 60 விழுக்காட்டினர் பேங்காக்கில் உள்ள இரண்டு சிறைச்சாலைகளில் உள்ளவர்கள்.

கிருமித்தொற்றின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த போராடும் தாய்லாந்து அதிகாரிகளுக்குச் சிறைச்சாலை குழுமத் தொற்று சம்பவங்கள் புதிய சவாலாக அமைந்துள்ளது.

மோசமடைந்து வரும் கிருமி பரவலால் தாய்லாந்து பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்தது.

நிரம்பி வழியும் தாய்லாந்து சிறைச்சாலைகளில், கொள்ளவைவிட 5 விழுக்காட்டினர் அதிகமாக அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னதாகவே விடுவிப்பது மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முயன்று வருகிறது.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று, மற்றவர்

களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தாதவர்களை விடுவிப்பதன் மூலம் சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்க வலியுறுத்தியது.

ஆனால் தாய்லாந்தின் சீர்

திருத்த துறை கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த தங்களிடம் தேவையான வளங்கள் உள்ளதாகவும், கைதிகளுக்குத் தடுப்பூசிகள் போட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியது.

கடந்த ஆண்டு, கிருமிப் பரவல் குறித்த அச்சத்தால் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தின்போது, சிறை வளாகத்தின் ஒரு பகுதிக்கு தீ வைக்கப்பட்டது.