திருமண விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாது. என்றாலும், திருமணப் பதிவு நிகழ்ச்சிகளில் முன் பரிசோதனை இன்றி 50 பேர் வரை பங்கேற்கலாம். முன் பரிசோதனையோடு 100 பேர் வரை பங்கேற்கலாம்.
50 விழுக்காடு அளவுடன் இயங்க ஏற்கெனவே அனுமதி பெற்ற சுற்றுலாத் தலங்கள், 25 விழுக்காடு அளவில் இயங்க வேண்டும்.
உள்புற, வெளிப்புற நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை கலந்துகொள்ளலாம். நிகழ்வுக்கு முந்திய பரிசோதனை முறை இடம்பெற்றால் அந்த எண்ணிக்கை வரம்பு 100 ஆக இருக்கும்.
அரும்பொருளகங்கள், பொது நூலகங்கள் 25 விழுக்காடு அளவுடன் இயங்கும்.
திரையரங்குகளுக்குள் ஒரே நேரத்தில் 50 பேர் வரை அனுமதிக்கப்படுவர். நிகழ்வுக்கு முந்திய பரிசோதனை முறை செயல்படுத்தப்பட்டால் அந்த எண்ணிக்கை வரம்பு 100 ஆக இருக்கும். திரையரங்கில் உணவு, பானங்களை விற்கவோ அருந்தவோ அனுமதி வழங்கப்படாது.

