இரண்டாவது முறை தடுப்பூசி போட்டுக்கொண்டார் ரஜினி

இரண்டாவது முறை தடுப்பூசி போட்டுக்கொண்டார் ரஜினி

1 mins read
76dd4c6b-90e7-41f6-be0e-fac9f1f99861
ரஜினி தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். படம்: டுவிட்டர்/சௌந்தர்யா ரஜினிகாந்த் -

நடிகர் ரஜினிகாந்த் 2வது முறை தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்த பிறகு சென்னையில் ரஜினி ஓய்வெடுத்து வருகிறார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, தீவிரமாக பரவி வரும் நிலையில் நடிகர் ரஜினி இன்று (மே 14) இரண்டாவது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

ரஜினி தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "கொரோனா கிருமிக்கு எதிரான போரை ஒன்றாக எதிர்த்து போராடுவோம்," என்று கூறியுள்ளார்.

இரண்டாம் முறையாக கொவிஷீல்ட் தடுப்பூசியை மருத்துவமனையில் ரஜினி போட்டுக்கொண்டார் என்று ரஜினியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஆனால் முதல் தடுப்பூசியை அவர் எப்போது எங்கு போட்டுக் கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்