இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 4,000 கொவிட்-19 மரணங்கள்

இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 4,000 கொவிட்-19 மரணங்கள்

1 mins read
5ceefca9-e27c-4792-ad12-92577132bc05
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் கொரோனா தொற்றுக்குக் குழந்தையைப் பறிகொடுத்த துக்கம் தாளாது, கண்ணீர்விட்டுக் கதறியழும் தந்தையை (நடுவில்) தேற்றும் தொண்டூழியர்கள். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 4,000 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன. அதே வேளையில், முந்திய நாளைக் காட்டிலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 19,000 குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 343,144 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்; 4,000 பேர் மாண்டுவிட்டனர்.

இந்தியாவின் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த நான்கு நாள்களில் 75 பேர் மரணமடைந்தனர்.

அம்மாநிலத்தின் ஆகப் பெரிய கொரோனா மருத்துவமனை இதுதான். கடந்த செவ்வாய்க்கிழமை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அங்கு 26 பேர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்