'தடுப்பூசி போட்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை'

'தடுப்பூசி போட்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை'

2 mins read
cc04f621-9b3f-4ca5-aa4a-674da501f82c
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் இரண்டு முறை தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­கள் பல இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வ­தைத் தவிர்க்­க­லாம் என்று அந்­நாட்­டின் நோய் கட்­டுப்­பாடு மற்­றும் தடுப்பு நிலை­யம் (சிடிசி) கூறி­யுள்­ளது.

முகத்தை மூடிக்­கொண்டு முடங்­கி­யி­ருந்த நாம் இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்­பு­வ­தற்­கான தொடக்­கமே இது என சிடிசி கூறி­யுள்­ளது.

அதற்­காக கொவிட்-19 கட்­டுப்­பாட்­டுக்­கான வழி­காட்­டிக் கையேடு திருத்­தப்­பட்­டுள்­ள­தாக சிடிசி கூறி­யது.

இந்த நட­வ­டிக்கை அமெ­ரிக்­கர்­கள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் ஆர்­வத்­தைத் தூண்­டும் என்று நம்­பு­வ­தாக சிடிசி கூறி­யது.

அதே­போல் இரண்டு முறை தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­கள் பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடை­பி­டிக்­கத் தேவை­யில்லை என்­றும் அறி­வித்­துள்­ளது.

இந்த நிலை­யம் கொவிட்-19 கட்­டுப்­பாடு குறித்த தனது திருத்­தப்­பட்ட வழி­காட்­டிக் கையேட்டை வெளி­யிட்­டது.

அந்­தக் கையேட்­டின்­படி தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு ஏரா­ள­மான கட்­டுப்­பா­டு­கள் அதில் விதிக்­கப்­பட்­டி­ருந்­தன. அதற்கு பல­த­ரப்­பி­ன­ரி­டம் இருந்து எதிர்ப்பு கிளம்­பின. அதை­ய­டுத்து சிடிசி தனது வழி­காட்டி கையேட்­டில் திருத்­தம் செய்து கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சிடி­சி­யின் இந்த அறி­விப்­புக்கு பல­த­ரப்­பி­ன­ரி­டையே வர­வேற்­புக் கிடைத்­துள்­ளது.

இருப்­பி­னும் தொழில்­துறை சங்­கங்­க­ளின் தலை­வர்­கள் இது தெளி­வற்ற தன்­மை­யைக் காட்­டு­வ­தா­கக் குறை கூறி­யுள்­ள­னர்.

அதா­வது, மாநி­லங்­கள் மற்­றும் ஊர்­களில் விதிக்­கப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­க­ளு­டன் இந்த அறி­விப்பு ஒத்­துப்­போ­க­வில்லை என்­று கூறினர்.

உள்­ளூர் கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்­று­வதா சிடி­சி­யின் அறி­விப்­பைக் கவ­னத்­தில் கொள்­வதா என்று வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு குழப்­பத்­தைத் தந்­துள்­ளது சிடி­சி­யின் திருத்­தப்­பட்ட வழி­காட்­டிக் கையேடு என்று கூறி­யுள்­ள­னர்.

இருப்­பி­னும் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் இதனை வர­வேற்­றுள்­ளார்.

வெள்ளை மாளி­கை­யில் நடந்த ஒரு கூட்­டத்­தில் அதி­பர் பைடன் முகக்­க­வ­சம் இன்றி காணப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அங்கு செய்­தி­யா­ளர்­கள் கலந்­து­கொண்ட ஒரு கூட்­டத்­தில் பேசிய அதி­பர் பைடன், "இது ஒரு நன்­னாள். இதை ஒரு சிறந்த மைல்­கல் என்றே நான் கரு­து­கி­றேன்," என்று கூறி­னார்.

அந்­தக்­கூட்­டத்­தில் அதி­பர் பைடன், தனது முகக்­க­வ­சத்­தைக் கழற்­றி­ய­தும் அங்கு வந்­தி­ருந்த செய்­தி­யா­ளர்­களும் தாங்­கள் அணிந்­தி­ருந்த முகக்­க­வ­சங்­க­ளைக் கழற்­றி­னர்.

"நீங்­கள் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருந்­தீர்­கள் எனில், உங்­கள் முகக்­க­வ­சங்­களை அகற்­றி­வி­ட­லாம். அதற்­கான உரி­மையை நீங்­கள் பெற்­றுள்­ளீர்­கள்," என்று திரு பைடன் கூறி­னார்.