ஜப்பானில் மேலும் 3 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு

ஜப்பானில் மேலும் 3 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு

1 mins read
1bc78d4d-c629-44a4-a4f2-2389efc92858
-

தோக்­கியோ: ஜப்­பா­னில் மேலும் மூன்று மாநி­லங்­களில் அவ­சர நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த மாநி­லங்­களில் கொவிட்-19 தொற்று அதி­க­ரித்­த­தை­ய­டுத்து இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொரு­ளி­யல் துறைக்­கான அமைச்­சர் யாசு­டோஷி நிஷி­முரா நேற்று கூறி­னார்.

ஹொக்­கைடோ, ஒக­யாமா மற்­றும் ஹிரோ­ஷிமா ஆகிய மாநி­லங்­கள் ஏற்­கெ­னவே அவ­ச­ர­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்ள தோக்­கியோ, ஒசாகா உள்­ளிட்ட நான்கு மாநி­லங்­க­ளு­டன் சேர்க்­கப்­பட்­டுள்­ளன என்று கூறி­னார் அமைச்­சர் யாசு­டோஷி. இவர் கொரோனா தொற்று கட்­டுப்­பாடு நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் தலைமை வகிக்­கி­றார்.

ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தின் தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் ஜப்­பா­னில் மூன்று விழுக்­காடு மக்­க­ளுக்கே தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது என்­றும் தடுப்­பூசி பணி மந்­த­மாக நடை­பெற்று வரு­வதே இதற்­குக் கார­ணம் என்றும் கூறப்­ப­டு­கிறது.

ஜப்­பா­னின் வடக்­குத் தீவு மாநி­ல­மான ஹொக்­கைய்­டோ­வில் நேற்­றைய நில­வ­ரப்­படி 712 புதிய தொற்று பாதிப்­பு­களும் தோக்­கி­யோ­வில் 1,010 தொற்று பாதிப்­பு­களும் பதி­வா­கி­யுள்­ளன. இது­வரை ஜப்­பா­னில் மொத்­தம் 656,000 தொற்­றுப் பாதிப்­பு­களும் 11,161 தொற்று மர­ணங்­களும் பதி­வா­கி­யுள்­ளன.