இஸ்ரேல், காஸாவில் தொடரும் சண்டை

இஸ்ரேல், காஸாவில் தொடரும் சண்டை

2 mins read
cb9e0099-b292-4dae-80a0-ee15a1b67dff
இஸ்ரேலியத் தாக்குதலால் கட்டடம் இடிந்து தீப்பற்றி எரிகிறது. பாலஸ்தீன தீ அணைப்பாளர்கள் தீயை அணைக்கப் போராடுகின்றனர். படம்: ஏஎஃப்பி -

காஸா: இஸ்­ரே­லுக்­கும் பாலஸ்­தீ­னத்­துக்­கும் இடையே பதற்­றம் அதி­க­ரித்து வரு­கிறது. இரு தரப்­பி­லும் உயிர்ச்­சே­தங்­கள் ஏற்­பட்டு வரு­கின்­றன.

இந்த நிலை­யில் பதற்­றத்­தைத் தணிப்­ப­தற்­காக அமெ­ரிக்கத் தூதர் ஹாடி அமர் இஸ்­ரேல் தலை­ந­கர் டெல் அவி­வுக்கு வந்­துள்­ளார்.

இஸ்­ரேல், பாலஸ்­தீ­னம் மற்­றும் ஐநா அதி­கா­ரி­களை அவர் சந்­தித்­துப் பேசு­வார் என எதிர்­பார்க்­கப்­ ப­டு­கிறது.

நேற்று அதி­கா­லை­யும் இஸ்­ரே­லிய ராணுவ விமா­னங்­கள், காஸா மீது மீண்­டும் வான்­வ­ழித் தாக்­கு­தல்­களை நடத்­தின.

இதற்கு, பாலஸ்­தீனப் போரா­ளி­கள் ஏவு­க­ணை­க­ளைப் பாய்ச்சி பதி­ல­டித் தந்­த­னர்.

கடந்த ஐந்து நாட்­க­ளாக இவ்­வட்­டா­ரத்­தில் பல ஆண்­டு­கள் இல்­லாத அளவில் வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இதில் காஸா­வில் 32 குழந்­தை­கள், 21 பெண்­கள் உட்­பட 132 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

இஸ்­ரே­லில் காஸா எல்­லை­யோரம் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்ட ராணுவ வீரர்­கள் உட்­பட எட்­டுப் பேர் மாண்­ட­னர்.

சனிக்­கி­ழமை இஸ்­ரே­லிய விமா­னங்­கள் தாக்­கி­ய­தில் காஸா சிட்­டி­யில் உள்ள முகாம்­களில் தங்­கி­யி­ருந்த எட்டு பாலஸ்­தீ­னர்­கள் உயி­ரி­ழந்­த­னர் என்று பாலஸ்­தீன சுகா­தார அதி­காரி ஒரு­வர் தெரிவித் தார்.

இதை­ய­டுத்து இஸ்­ரே­லின் பியர்­ஷெபா நகரை குறி வைத்து ஹமாஸ் போரா­ளி­கள் தாக்­கி­னர்.

கடந்த ெவள்­ளிக்­கி­ழமை அன்று வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் மேற்கு கரைக்­கும் பர­வி­யது.

இதில் பத்­துக்­கும் மேற்­பட்­டோர் மாண்­ட­னர், நூற்­றுக்­க­ணக்­கா­னோர் காயம் அடைந்­த­னர்.

இஸ்­ரே­லியப் படை­கள், கண்­ணீர்ப் புகை குண்­டு­களை வீசி­யும் ரப்­பர் தோட்­டக்­க­ளால் சுட்­டும் தாக்­கி­ய­தால் பாலஸ்­தீ­னர்­கள் அவர்­கள் மீது பெட்­ரோல் குண்­டு­களை வீசி­னர்.

இன்று ஐநா பாது­காப்பு மன்­றம் கூடுகிறது.

இவ்வேளை­யில் அமெரிக்கத் தூதர் அமரின் சமாதானப் பயணம் தொடங்கியுள்ளது.

இவரது பயணம் குறித்து பேசிய இஸ்­ரே­லில் உள்ள அமெ­ரிக்க தூத­ரகம், திரு அமர் அமை­தியை ஏற்­ப­டுத்­தும் முயற்­சி­யில் ஈடு­ப­டு­வார் என்று தெரிவித்தது.