செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய சீனாவின் விண்கலம்

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய சீனாவின் விண்கலம்

2 mins read
0591169d-f9ec-494c-905e-17d9119e753d
ஆறு சக்கர ஷுரோங் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யவிருக்கிறது. படம்: மார்ஸ்ஷுரோங்/ டுவிட்டர் -

பெய்­ஜிங்: சீனா­வின் 'ஷுரோங்' ஆறு சக்­கர ஆய்வுக் கலம் செவ்­வாய் கிர­கத்­தில் வெற்­றி­க­ர­மாக தரை­யி­றங்­கி­யுள்­ள­தாக அந்­நாடு அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது.

ஷுரோங்கை ஏந்­தி­யி­ருந்த விண்­க­லம் வான்­குடை உத­வி­யு­டன் ஏழு நிமிட கடி­ன­மான பய­ணத்தை மேற்­கொண்டு செவ்­வாய் கிர­கத்­தின் உடோ­பியா பிளா­னி­ஷியா என்ற இடத்­தில் துல்­லி­ய­மாகத் தரை­யி­றங்­கி­யது.

"முன்­கூட்­டியே தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட இடத்­தில் ஆய்வுக் கலம் வெற்றிகர­மாக இறங்­கி­யது," என்று சீன தேசிய விண்­வெளி நிர்­வா­கம் உறு­திப்­ப­டுத்­தி­யதை சுட்­டிக்­காட்டி அதி­கா­ர­பூர்வ செய்தி நிறு­வ­ன­மான ஸின்­ஹுவா பெரு­மை­யு­டன் அறி­வித்­தது.

செவ்­வாய் கிர­கத்­துக்கு மேற்­கொண்ட முதல் பய­ணத்­தி­லேயே அதன் சுற்­றுப்­பா­தை­யில் நுழைந்து வெற்­றி­க­ர­மா­கத் தரை­யி­றங்கி ஆய்வு மேற்­கொள்­ளும் நாடு என்ற பெரு­மையை சீனா பெற்­றுள்­ளது.

இதற்­கி­டையே சீன அதி­பர் ஸி ஜின்­பிங், இந்­தத் திட்­டத்­தில் பங்­கேற்­றுள்ள அனை­வ­ரை­யும் பாராட்­டி­யுள்­ளார்.

"சவால்­களை தைரி­யத்­து­டன் எதிர்­கொண்­டீர்­கள், கிர­கங்­களை ஆய்வு செய்­யும் வரி­சை­யில் சீனாவை இடம்­பெ­றச் செய்­தீர்­கள்.நாடும் நாட்டு மக்­களும் மறக்க முடி­யாத சாத­னை­யைப் புரிந்­துள்­ளீர்­கள்," என்று திரு ஸி குறிப்­பிட்­டார்.

பெய்­ஜிங்­கில் உள்ள கட்­டுப்­பாட்டு அறை­யில் ஷுரோங் தரை­யி­றங்­கும் உயி­ரோ­வி­யக் காட்சி காட்­டப்­பட்­டது. அதைப்­பார்த்து அறி­வி­யல் அறி­ஞர்­கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

சூரிய சக்­தி­யில் இயங்­கும் ஆறு சக்­க­ரங்­கள் கொண்ட ஷுரோங் ஆய்வுக் கலம் 240 கிலோ எடை­யைக்­ கொண்­டது.

செவ்­வாய் கிர­கத்­தில் மண், பாறை, துகள்­களை சேக­ரித்து அது மூன்று மாதங்­கள் ஆய்வு செய்­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா­வின் தியான்­வென்-1 விண்­க­லம் செவ்­வாய் கிர­கத்­தின் சுற்று வட்­டப்­பா­தைக்­குள் நுழைந்­தது.

பின்­னர் அதி­லி­ருந்து பிரிந்து தரை­யி­றங்க உத­வும் சாத­னத்­தின் மூலம் 'ஷுரோங்' ஆய்­வுக் கலம் செவ்­வாய் கிர­கத்­தின் மேற்பரப்­பைத் தொட்­டது.

அமெ­ரிக்கா, ரஷ்­யா­வுக்­குப் பிறகு 3வது நாடாக சீனா செவ்­வாய்க் கிர­கத்தை நெருங்­கி­யுள்­ளது. சென்ற பிப்­ர­வ­ரி­யில் அெமரிக் காவின் 'நாசா', பெர்­சி­வ­ரன்ஸ் ஆய்­வுக்­க­லத்தை செவ்­வாய் கிர­கத்­தில் வெற்­றி­க­ர­மாக இறக்கி சாதனை படைத்­தது.

அந்த ஆய்வுக் கலம் இன்­ன­மும் செவ்­வாய் கிர­கத்தில் ஓடி வரு கிறது.