இந்தியாவிலிருந்து குடிமக்களை அழைத்துச் சென்ற ஆஸ்திரேலியா

இந்தியாவிலிருந்து குடிமக்களை அழைத்துச் சென்ற ஆஸ்திரேலியா

1 mins read
bc650e3e-6f0d-49d9-a2f6-4c5ada04f874
ஆஸ்திரேலிய விமானப் படை வெளியிட்ட இந்தப் படத்தில் டார்வினில் உள்ள விமானப் படைத் தளத்தில் இந்தியாவிலிருந்து வந்த விமானம் தரையிறங்கியுள்ளதைக் காட்டுகிறது. இதில் எண்பது பயணிகள் பயணம் செய்தனர். படம்: இபிஏ -

மெல்­பர்ன்: கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் இந்தியா கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் அங்கிருந்து வரும் அனைத்து விமா­னச் சேவை­க­ளுக்­கும் ஆஸ்­தி­ரே­லியா தற்­கா­லி­கத் தடை விதித்­தது.

ஆனால் இதனை சொந்த நாட்டினரே குறைகூறினர்.

இதை­ய­டுத்து தனது நாட்டு மக்­களை இந்­தி­யா­வி­லி­ருந்து வெளி­யேற்­றும் பணியை ஆஸ்­தி­ரே­லியா தொடங்­கி­யுள்­ளது.

நேற்று புது­டெல்­லி­யி­லி­ருந்து டார்­வினை நோக்­கிப் புறப்­பட்ட முதல் விமா­னத்­தில் எண்­பது பேர் பய­ணம் செய்­த­னர்.

ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்க ஆத­ரவு குவாண்­டாஸ் விமா­னத்­தில் ஏறு­வ­தற்கு முன்பு இரு முறை கொவிட்-19 பரி­சோ­தனை செய்து தொற்று இல்லை என்­ப­தைக் காட்­டும் சான்­றி­தழை பய­ணி­கள் வழங்க வேண்­டும். டார்­வின் வந்­த­டைந்­த­தும் பய­ணி­கள் இரு வாரம் தனி­மைப் ­ப­டுத்­தப்படு­வர்.

கடந்த மாதம் இந்­தி­யா­வி­லி­ருந்து வரும் விமா­னங்­க­ளுக்கு தற்­கா­லி­கத் தடை விதித்­த­தால் ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்தை சொந்த நாட்டு மக்­களே கடு­மை­யாக விமர்­சித்­த­னர். குடி­மக்­கள்­கூட நாடு திரும்ப முடி­ய­வில்லை என்று பலர் அர­சாங்­கத்­தைச் சாடி­னர். இதை­ய­டுத்து நாட்டு மக்­களை அழைத்­துச் செல்­லும் பணியை ஆஸ்­தி­ரே­லியா தொடங்­கி­யது.

"மருத்­துவ ஆலோ­ச­னை­க­ளைப் பின்­பற்றி இங்­குள்ள ஆஸ்­தி­ரே­லி­யர்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்ய விரும்­பு­கி­றோம்," என்று ஆஸ்­தி­ரே­லிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோஷ் ஃப்ரைடென்­பெர்க் தெரி­வித்­தார்.

ஜூன் மாத இறு­திக்­குள் இந்­தி­யா­வி­லி­ருந்து மேலும் ஆயி­ரம் பேரை ஏற்­றிச்­செல்ல இரண்டு விமா­னங்­க­ளுக்கு ஆஸ்­தி­ரே­லியா அரசு ஏற்­பாடு செய்­துள்­ளது. இந்­தி­யா­வில் உள்ள சுமார் 9,000 ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் நாடு திரும்ப ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கத்­தி­டம் பதிவு செய்­துள்­ள­னர்.