இஸ்ரேல்: பலமாக தாக்குவோம்

இஸ்ரேல்: பலமாக தாக்குவோம்

2 mins read
06eb20e0-5f57-42b2-84da-14f9ff32173a
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தரைமட்டமான கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்றி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் பாலஸ்தீனர்கள். படம்: ஏஎஃப்பி -

இஸ்­ரேல்: இஸ்­ரேல்-காஸா மோதலை முடி­வுக்கு கொண்டு வர உலக நாடு­கள் அழைப்பு விடுத்­துள்­ள­தற்கு மத்­தி­யில், 'தொடர்ந்து பல­மாக பதி­லடி கொடுப்­போம்' என்று இஸ்­ரேல் பிர­த­மர் பெஞ்­ச­மின் நெட்­டன்­யாகு கூறி­யுள்­ளார்.

காஸா­வில் உள்ள ஏபி மற்­றும் அல் ஜசீரா ஊடக நிறு­வ­னங்­கள் செயல்­பட்டு வந்த அல்-ஜலா கட்­ட­டத்தை இஸ்­ரேல் சனிக்கிழமை குண்டு வீசி தகர்த்தது.

குடி­யி­ருப்­பு­க­ளை­யும் கொண்ட அந்த கட்­ட­டத்­தைக் குண்டு வீசி தகர்ப்­ப­தற்கு முன்­னர் அங்­கி­ருந்த வர்­களை வெளி­யே­றும்­படி இஸ்­ரேல் எச்­ச­ரித்­தது.

இந்த கட்­ட­டம் ஹமாஸ் போரா­ளி­க­ளின் கூடா­ர­மாக செயல்­பட்டு வந்­த­தாக இஸ்­ரேல் தரப்­பில் கூறப்­

ப­டு­கிறது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஊடக நிறுவனமான ஏபி, அதற்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் போரா­ளி­கள் குழு­வும் டெல் அவிவ் மீதும் தெற்கு இஸ்ரேல் நகரங்கள் மீதும் ஏவு­

க­ணை­கள் வீசி தாக்­கு­தல் நடத்­தி­யது.

அதன் பிறகு பேசிய இஸ்­ரேல் பிர­த­மர் நெட்­டன்­யாகு, "தாக்­கு­தல் இன்­னும் முடி­வ­டை­ய­வில்லை. தேவைப்­படும் வரை இது தொட­ரும்," என்­றார். ஹமாஸ் தரப்பும் தாக்குதல் தொடரும் என்று கூறியுள்ளது.

இதற்­கி­டையே, நேற்று அதி காலை, காஸா­வில் உள்ள ஹமாஸ் போரா­ளி­கள் குழு­வின் தலை­வ­ரான யேஹியா சின்­வா­ரின் வீட்டை

குண்டு வீசி தரை­மட்­ட­மாக்­கி­ய­தாக தெரி­வித்த இஸ்­ரேஸ் ராணு­வம், அது தொடர்­பாக காணொளி ஒன்­றை­யும் வெளி­யிட்­டது.

இந்த தாக்­கு­தல்­களில் பாலஸ்­தீன தரப்­பில் குறைந்­தது நான்கு பேர் மாண்­ட­னர். பலர் காய­ம­டைந்­த­னர்.

கிழக்கு ஜெரு­ச­லே­மி­லி­ருந்து பல பாலஸ்­தீன குடும்­பங்­களை வெளி­யேற்­று­வ­தற்­கான நீதி­மன்ற வழக்கு தொடர்­பில் பல வாரங்­

க­ளாக நீடித்த பதற்­றங்­க­ளுக்­குப் பின்­னர் சென்ற திங்­கட்­கி­ழமை ஹமாஸ் போரா­ளி­கள் குழு ஆகா­யத் தாக்­கு­த­லைத் தொடங்­கி­யது.

இந்த தாக்குதல் தொடங்கியதில் இருந்து காஸாவில் 39 பிள்ளைகள் உட்பட 141 பேரும் இஸ்ரேல் தரப்பில் இரண்டு பிள்ளைகள் உட்பட 10 பேரும் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸாவில் உயிரிழப்பு மேலும் அதிகரித்து வருவதாக அல் ஜசீரா ஊடக செய்தி கூறுகிறது.

காஸாவில் ஊடக நிறுவனங்களின் அலுவலகக் கட்டடங்கள் தரைமட்டம்