மருத்துவ படுக்கைகள் பற்றாக்குறை

மருத்துவ படுக்கைகள் பற்றாக்குறை

1 mins read
bb1d3e95-2b4f-4367-8310-fe41bc186d7f
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வில் அரசு மருத்­து­வ­ம­னை­களில் தீவிர சிகிச்சை பிரிவு படுக்­கை­க­ளுக்­குப் பற்­றாக்­குறை நில­வு­வ­தாக சுகா­தார இயக்­கு­நர் நூர் ஹிஷாம் தெரி­வித்­துள்­ளார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் மோச­மாக பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளதே இதற்கு கார­ணம் என்­றும் அவர் சொன்­னார்.

கோலா­லம்­பூர், சிலாங்­கூர், பினாங்கு, சர­வாக், கெடா மற்­றும் பேராக் மாநி­லங்­க­ளின் மருத்­துவ

மனை­களில் தீவிர சிகிச்சை பிரிவு படுக்­கை­கள் 80 விழுக்­காட்­டிற்­கும் மேல் நிரம்­பி­விட்­ட­தா­க­வும் சில மருத்­து­வ­ம­னை­களில் அனைத்து தீவிர சிகிச்சை பிரிவு படுக்­கை­களும் நிரம்­பி­விட்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

தற்­போது நாடு முழு­வ­தும், 78 அர­சாங்க மற்­றும் கல்வி மருத்­து­வ­ம­னை­களில் 1,388 தீவிர சிகிச்சை பிரிவு படுக்­கை­கள் உள்­ள­தா­க­வும் அவற்­றில் 61 விழுக்­காட்டு படுக்­கை­கள் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

ஆனால், தேவைக்­கேற்ப கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­கான படுக்­கை­க­ளின் எண்­ணிக்கை அதி­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, சுகா­தார அமைச்­சின் புதிய கணிப்­பு­படி, கட்­டுப்­பாட்டு விதி­கள் சரி­யாகப் பின்­

பற்­றப்­ப­ட­வில்லை என்­றால் ஜூன் மாதத்­திற்­குள் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் அன்­றாட எண்­ணிக்கை 8,000க்கும் மேல் பதி­வா­கக்­கூ­டும் என்­கிறது. முன்­ன­தாக இது 5,000மாக அதி­க­ரிக்­கும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

மலே­சி­யா­வில், நேற்று 3,780 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­ன­தைத் தொடர்ந்து, பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்­ணிக்கை 470,110 ஆனது.